பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

checked objects

246

check register


ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள். தரவு எழுதும்போதோ அல்லது அனுப்பும் போதோ ஏதாவது தவறு ஏற்பட்டால் பிழை என்பதற்கான அடையாளம் தோன்றும்.

checked objects : தேர்வு செய்த பண்பு.

checked property : சரிபார்ப்புப் பொருள்.

check, even parity : இரட்டைச் சமன் சரிபார்ப்பு.

check indication : சரிபார்ப்புப் அறிகுறி : ஒரு பதிவகத்தில் 1 அல்லது 0 துண்மியை அமைத்து அதில் பிழை ஏற்பட்டதா இல்லையா என்று குறிப்பிடச் செய்தல்.

check indicator : சரிபார்ப்புப் அறிகுறி : ஒரு சாதனத்தில் ஒலி அல்லது ஒளி மூலம் அதன் இயக்கத்தில் பிழை அல்லது கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுதல்.

check now : இப்போது சரிபார்.

check, odd parity : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு.

check out : சரிபார்த்து அனுப்புகை.

check, parity : சமன் சரிபார்ப்பு.

check plot : சரிபார்ப்பு வரைவு : இறுதி வெளியீட்டை அளிப்பதற்கு முன் ஒளிச் சோதனை மற்றும் திருத்துவதற்காக ஒளிக் காட்சிச் சாதனம் தானாக உருவாக்கும் ஒரு வரைவு.

check point : சரிபார்ப்பிடம் : கையால் இயக்கும்போதோ அல்லது கட்டுப்பாட்டுச் செயல் முறையிலோ ஒரு நிரலைத் தடுத்து நிறுத்தும் குறிப்பிட்ட இடம். பிழை தீர்க்கும் நிரல்களில் உதவுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.

checkpoint / restart : சரிபார்ப்பிடம் / மீளியக்கம் : கணினி அமைப்பின் கோளாறிலிருந்து வரும்முறை. கணினி நினைவகத்தில் தரவு பதிவு செய்யப்படும்போது அங்கங்கே வைக்கப்படும் புள்ளி. கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், கடைசி சரிபார்ப்பிடத்திலிருந்து மீண்டும் துவக்கலாம். கடைசி சரிபார்ப்பிடத்திற்குப் பிறகு துழைக்கப்பட்டவை எல்லாம் தொலைந்து போய்விடும்.

check problem : சரிபார்ப்புச் சிக்கல் : ஒரு கணினி அல்லது கணினி நிரல் சரிவர இயங்குகிறதா என்பதை முடிவு செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல்.

check register : சரிபார்ப்புப் பதிவேடு.