பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colour balancing

273

colour code


வரிசை உடைய சிவப்பு நிறம் வரை நிறங்கள் உண்டு. மின்காந்த நிறமாலை முழுமையின் ஒரு சிறு பகுதியாகக் காணக் கூடிய ஒளிப் பட்டையில் அந்த நிறங்களைக் காணலாம். கணினி ஒளிக்காட்சியில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து செயல்பட்டு நிறம் உண்டாக்கப்படுகிறது. தனித்தனி நிறங்களுக்குரிய துண்மிகளை இணைக்கும் வேலையை மென்பொருள் செய்கிறது. அந்தத் துண்மிகளுக்குத் திரையில் குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. படக்கூறுகள் எனப்படும் தனித்தனிப் புள்ளிகள் அல்லது குறியீட்டு எண் குறிப்பிட்ட இடமாகும். வன்பொருளிலுள்ள தகவமைப்பு ஏற்பாடு இந்தத் துண்மிகளை மின்குறியீடுகளாக மாற்றுகிறது. எதிர்மின்வாய்க் கதிர்க் குழல் காட்சித்திரையில் நேரிணைவான இடங்களில் உள்ள வெவ்வேறு நிறமுடைய எரியங்களின் பிரகாச அளவை அந்தக் குறியீடுகள் கட்டுப்பாடு செய்கின்றன. பயனாளரின் கண்கள் எரியங்கள் (Phosphors) கொடுக்கும் ஒளிகளை இணைத்து ஓர் ஒற்றை நிறமாகக் காண்கின்றன.

colour balancing : வண்ண சம நிலைப்படுத்துதல்; நிறச் சமனாக்கம்.

colour bits : நிறத் துண்மிகள் : நிறத்தைக் குறிப்பிடும் ஒவ்வொரு படப்புள்ளியுடனும் இணைக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை. 16 நிறங்களுக்கு 4 துண்மிகள் பயன்படுத்தப்படுகின்றன. 256 நிறங்களுக்கு 8 துண்மிகள்.

colour burst : நிற வெடிப்பு : வண்ணத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கருப்பு வெள்ளைத் தொலைக் காட்சித் திரையில் காண்பதற்காக ஆரம்பத்தில் உண்டாக்கப்பட்ட தொழில் நுட்பம். ஒளிக் காட்சி சமிக்கையில் நிறத்தைக் குறியீட்டு வடிவில் மாற்ற உதவும் தொழில் நுட்பமாக இப்போது உள்ளது.

colour burst signal ; நிறம் வெடிப்புச் சமிக்கை : நிறம் பற்றிய தரவுவை அளிக்கும் ஒளிக்காட்சி வெளியீட்டில் உள்ள சமிக்கை. நிறம் வெடிப்புச் சமிக்கையை நிறுத்துவதனால் கறுப்பு வெள்ளை திரைகளில் படங்களின் தரம் கூடும்.

colour camera : வண்ணப் படப்பிடிப்பு : ராஸ்டர் ஸ்கேன் காட்சி சாதனங்களில் தரவுகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம்.

colour code : நிற குறிமுறை : காட்சித்திரையில் தெரிகின்ற 16 நிறங்களுள் ஒன்றைக் குறிப்


18