பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer family

306

computer graphicist


களின் சட்ட, தொழில் சார்ந்த, சமூக, ஒழுக்கமுறைப் பொறுப்புகளைக் கட்டுப்படுத்தும் கொள்கைகள்.

computer family : கணினிக் குடும்பம் : ஒரே வகையான நுண்செயலிகளையோ, ஒரே வடிவமைப்பிலமைந்த நுண் செயலிகளையோ கொண்ட கணினிக் குழுக்களைக் குறிக்கும் சொல். (எ-டு) ஆப்பிள் குடும்பக் கணினிகள் மெக்கின்டோஷ் என்றழைக்கப்படுகின்றன. சுருக்கமாக மேக் எனப்படும் இவை மோட்டோரோலா 68000, 68020, 68030, 68040 ஆகிய நுண்செயலிகளில் செயல்படுகின்றன. சில வேளைகளில் அவை வேறு செயலிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. (எ-டு) மேக் கணினிக் குடும்பத்தில் இப்போதெல்லாம் பவர்பீசி (PowerPC) நுண்செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பவர்மேக் என்றழைக்கப்படுகின்றன.

computer, first generation : முதல் தலைமுறைக் கணினி.

computer flicks : கணினிப் படங்கள் : கணினி தயாரிக்கும் திரைப்படங்கள்.

computer floor : கணினி தரை : ஒரு பொய்த்தரை உண்மையான தரை அளவிலிருந்து 25-30 செமீ-க்கும் மேலாக இருக்கும். கணினி தரைதான் கணினி இருப்பிடத்தில் வசதியாகக் வடங்கள் நீக்கவும், தடையில்லாமல் இயங்கும் சூழ்நிலையையும் உருவாக்க உதவும்.

computer fraud : கணினி ஏய்ப்பு; கணினி மோசடி.

computer game : கணினி விளையாட்டு : விளையாடுபவரின் உடற் செய்கைகளை உள்ளீட்டுத் தரவுவாகக் கொண்டுள்ள உரையாடல் வகை மென்பொருள். இதன் வெளியீடு உரையாடல் முறையிலான வரைபட முறை காட்சியாக இருக்கும்.

computer, general purpose : பொதுப் பயன் கணினி.

computer generations : கணினி தலைமுறைகள் : ஐந்து வேறுபட்ட கால இடைவெளிகளில் மின்னணுக் கணினிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நடைமுறையும் வன்பொருள்/மென்பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வெவ்வேறு தொழில் நுட்பத்தைச் சார்ந்து உருவானவை. கணிப்பின் வரலாற்று முன்னேற்றத்தின் முக்கிய நிலைகள்.

computer graphicist : கணினி வரைகலைஞர் : கணினி வரை