பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323


conjuct

connectionless

அல்லது மென்பொருளையோ ஒன்று சேர்த்து ஒரு அமைப்பாக்குதல். அதன் ஒவ்வொரு பகுதிகளும் சரிசெய்யப்பட்டு மொத்தமாக ஒன்றாக இயங்கச் செய்தல். பிற அல்லது வன்பொருளோடு ஒத்திசைவாய் இயங்கும் வண்ணம் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருளைத் தயார் செய்தல்.

conjuct : இணை : ஒரு இணைப்பின் பல துணைச் சிக்கல்களில் அல்லது நிலைகளில் ஒன்று.

conjugation : புடைபெயர்ப்பு .

connect : இணைத்திடு.

connect charge : இணைப்புக் கட்டணம் : வணிகமுறைத் தரவு தொடர்பு அமைப்பு அல்லது சேவையுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு பயனாளர் செலுத்த வேண்டிய தொகை. சில சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இவ்வளவு தொகை என இணைப்புக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. வேறு சில சேவைகளுக்கு, சேவையின் வகைக்கேற்ப அல்லது பெற்ற தகவலின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. வேறுசில சேவையாளர்கள், எவ்வளவு மணி நேரம் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற அடிப் படையில் கட்டணம் நிர்ணயிக் கின்றனர். சில வேளைகளில், இணைப்பின் தொலைவு, அலைக்கற்றை அகலம் அல்லது மேற்கூறியவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளைக் கணக்கில் கொண்டும் இணைப்புக் கட்டணம் வரையறுக்கப்படுகின்றது.

connected graph : இணைந்த வரை படம் : ஒரு வரைபடத்தின் தனி முனையிலிருந்து தொடர்ச்சியான விளிம்புகள் வழியாக வேறு ஏதாவது ஒரு முனைக்கு நகர்த்தி உருவாக்கப்படும் வரைபடமுறை.

connected line : இணைத்தடம், தொடர்புடைய இணைப்பு.

connecting cable : இணைப்பு வடம் : இரண்டு கருவிகளுக்கிடையில் மின்துடிப்புகளை பரிமாற உதவும் குழாய்.

connection : இணைப்பு : ஒரு வடம் அடிக்கட்டகம் அல்லது ஒரு பகுதியுடன் இணைப்பு ஏற்படுத்தும் மின்சார அல்லது எந்திர இணைப்பு வழங்கும் பொருத்து சாதனம்.

connectionless : இணைப்பற்ற : கணினி வழி தகவல் தொடர்பில் ஒரு வகை. நேரடி இணைப்பு அல்லது முனை