பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cordless telephone

344

coresident



Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு உருவாக்கித் தந்த வரன்முறைகள் ஆகும். வெவ்வேறு பணித் தளங்களில் செயல்படும் இரு நிரல்களில் உருவாக்கப் பட்டுள்ள வெவ்வேறு பொருள் கூறுகள் தமக்குள்ளே தரவு பரிமாற்றம் செய்து கொள்ளும். ஒரு நிரல், ஒரு பொருள் கோரிக்கை முகவர் (ORB) மூலமாக ஒரு பொருள் கூறின் சேவைக்கான கோரிக்கையை முன் வைக்கும். அந்தப் பொருள்களை உள்ளடக்கிய நிரலின் கட்டமைப்பு எப்படிப் பட்டது என்பதை அறிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. கோர்பா, ஒரு பொருள் நோக்கு பணிச் சூழலுக்கென வடி வமைக்கப்பட்ட தொழில் நுட்பம் ஆகும்..

cordless telephone : கம்பியில்லாத் தொலைபேசி.

cordless video transmitter : கம்பியில்லாத ஒளிபரப்பி : 60 மீட்டர் குறுக்களவுக்குள் எத்தனை தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தாலும் அத்தனைக்கும் ஒலிஒளி சரிக்கைகளை அளிக்கும் மின்னணுக் கருவி.

core : உள்ளகம் : காந்தப் படுத்தப்படக்கூடிய ஃபெரைட் மையத்தைக் கொண்ட தலைமை நினைவகம்.

core, bistable magnetic : இரு நிலை காந்த உள்ளகம்.

core ferrite : இரும்பு உள்ளகம்.

core magnetic : காந்த உள்ளகம். core memory : உள்ளக நினை வகம்; உள்மைய நினைவு : ஃபெரைட் வளையங்களாலான ரைடுகளால் உருவாக்கப் படும் காந்த நினைவகம். இதை ஒரு திசையில் காந்தப்படுத் தினால் இரும எண் -ம் வேறு திசையில் காந்தப்படுத்தினால் ) வும் வரும். 1940இல் ஜே. மிர் பாரஸ்டர் மற்றும் டாக்டர் அன்வாஸ் ஆகியோர் இதை உருவாக்கினார்கள். மின்சாரம் இல்லாமலேயே இது இயங்கும் என்பதால் இராணுவம், விண்கலங்கள் ஆகியவற்றில் இன்னும் இது பயன்படுத்தப் படுகிறது.

care programme : உள்ளக நிரல் : குறிப்பிலா அணுகு நினைவகத்தில் {Random Access Memory) தங்கியிருக்கும் ஒரு நிரல் அல்லது நிரலின் ஒரு பகுதி.

coresident : உடன்தங்கல் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கள் ஒரே நேரத்தில் நினை