பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

core storage

345

corrective maintenance


வகத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையைக் குறிக்கிறது.

core storage : உள்ளகச் சேமிப்பு : காந்த மையங்களைப் பயன் படுத்தும் சேமிப்புச் சாதனம். ஒரு வரிசையாக கம்பிகளின் மூலம் இது தொகுக்கப்படுகிறது.

core store. : உள்ளக சேமிப்பு.

core system : உள்ளக முறைமை : கணினி வரை கலைக்காக முதலில் உருவாக்கிய தர நிர்ணயம். சிகார்ப் நிறுவனம் உருவாக்கியது. கணினிகளுக் கிடையே நிரல்களை மாற்றி அனுப்ப முடிவதும், பார்க்கும் வரைகலையும் மாதிரியாக்கும் வரைகலையும் தனிமைப்படுத்தப்படுவதும் இதன் நோக்கங்கள். அன்சி அங்கீகரித்த ஜிகோஸ் தர நிர்ணயம் இதன் அனைத்து தன்மைகளையும் ஏற்றுள்ளது.

corner cut : மூலை வெட்டு : துளையிட்ட அட்டையின் மூலை வெட்டு. தொடர்புடைய அட்டைகளின் குழுக்களை கண்டுபிடிக்க உதவுகிறது.

corona wire : மின்னுமிழ்வுக் கம்பி : லேசர் அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புக் கம்பி. காற்றை அயனியாக்க இதன் வழியாக உயர் மின்னழுத்தம் பாய்ச்சப் படுகிறது. அதன் மூலம் ஒரே சீரான நிலைமின்னூட்டம் ஒர் ஒளியுணர் ஊடகத்துக்கு மாற்றப் பட்டு லேசர் கதிர் உருவாக்கப் படுகிறது.

coroutine : இணை நிரல்கூறு : உள்ளிட்டுத் தொகுதி ஒன்றை வெளியீட்டு தொகுதியாக மாற்ற உதவும் ஆணைகள்.

corporate model : நிறுவன மாதிரியம் : ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள் கணக்கீட்டு மற்றும் நிதிக் கொள்கை வழி காட்டிகளை பாவிப்பு நிகழ்வாகக் கணித முறையில் குறிப்பிடுவது. சில குறிப்பிட்ட அனுமானங்களின் கீழ் ஏற்படும் நிதி விவகார முடிவுகளை மதிப்பீடு செய்து மாற்றுத் திட்டங்களை உருவாக்குதல், நீண்டகால மதிப்பீடுகளை இத்தகைய மாதிரியங்களைப் பயன்படுத்தி மதிப்பிடுவார்கள். சமநிலை செயலாக்கிகளைப் பயன்படுததுவதே சிறந்தது என்றாலும் விரிதாள்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

corporates : நிறுமங்கள்.

correction : திருத்தம்.

corrective : பழுது நீக்கல்.

corrective maintenance : சரி செய்யும் பராமரிப்பு : தவறுகள் ஏற்பட்ட பிறகு அவற்றைக் கண்டுபிடித்து சரி செய்தல்.