பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data cable

378

data center


எழுத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது கணிதவியல் அல்லது தருக்கவியல் நடைமுறைகளிலோ, நினைவக சேமிப்பிலோ பயன்படுத்தப்படுகிறது.

data cable : தரவு வடம் : தரவுத் தொடர்புச் செயல்பாட்டில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்குத் தகவலை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இழை ஒளிவ வடம் அல்லது கம்பி வடம்.

data capture : தரவுப் பரப்பி : தரவுக் கவர்வு. data capturing : தரவை கவர்தல் : கணினி கையாளு வதற்காக தரவுகளை சேகரித்தல் அல்லது தொகுத்தல், பணியை வகைப்படுத்தலில் முதல் நட வடிக்கையாகும். இதனை தரவு சேகரிப்பு என்றும் கூறுவார்கள்.

data card : தரவு அட்டை : துளையிடப்பட்ட அட்டை ஒன்றுக்கு மேற்பட்ட தரவு களைக் கொண்டது.

data carrier : தரவு ஏந்தி : எந்திரத்தில் படிக்கக் கூடிய தரவுகளை இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வட்டு, நாடா போன்ற ஒர் ஊடகம்.

data carrier store : தரவு ஊர்திச் சேமிப்பி : கணிப்பொறியின் புற நிலைச் சாதனமாக உள்ள நிரந்தரச் சேமிப்புச் சாதனம். எடுத்துக்காட்டு நெகிழ் வட்டுகள் (Floppy disks).

data cartridge : தரவுப் பொதியுறை : காந்த நாடா அடங்கியுள்ள, அப்புறப்படுத்தத்தக்க சேமிப்புத் தகவமைவு.

data catalog : தரவுப் பதிப்பி : தரவு கவர்வி : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தரவுக் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்குமுறைப் படுத்திய பட்டியல்.

data cell : தரவு அறை : நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந்தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கையாளுகிறது.

data center : தரவு மையம் : கணிப் பொறியமைவுகளும், அதன் தொடர்புடைய சாதனங்களும் வைக்கப்பட்டிருக்கும் துறை. தரவு நுலகம் இந்த மையத்தின் ஒரு பகுதியாகும். பதிவுத் துறையும், பொறியமைவு செயல்முறைப்படுத்தும் துறையும் இந்த மையத்தின் கீழ்வரும். இதிலுள்ள கட்டுப்பட்டுப் பிரிவு, பல்வேறு பயன்பாட்டுத் துறை