பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data editing

384

data entry device


வமைவாக இருக்கும்போது, அதுபெறும் ஒவ்வொரு குறியீடும் பதினாறிலக்கக் குறி மானத்தில் அச்சிடப்படுகிறது. இதனைப் பதினாறிலக்கச் சேமிப்பு என்றும் கூறுவர்.

data editing : தரவு சீரமைப்பு : தரவு உள்ளிட்டில் பிழைகளை, தவறுகளை, முரண்களைக் கண்டறிவதற்கான உத்தி. எடுத்துக்காட்டாக சோதனைகளைக் கூறவேண்டும். விரிவெல்லைச் சோதனை, காரிய சாத்தியமா என்பதற்கான சோதனை, தரவுகள், எழுத்து, எண்ணியல் முறையில் தேவைப்படும் வகையில் முறையாக உள்ளதா என்பதற்கான சோதனைகள்.

data element : தரவு உறுப்பு : தரவுக் கூறு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவு வகைகளின் இணைப்பாகும். அவை ஒரு அலகு அல்லது சிறு தரவைக் குறிப்பிடுகிறது. அத் தகவல் ஒரு தொழிலாளியின் சமூகப் பாதுகாப்பு எண், அல்லது சம்பளப் பட்டியலைப் பற்றிய தரவு அடிப்படையாக அமையலாம்.

data encryption : தரவுக் குறியீட்டு முறை : தரவுக் குறியீட்டாக்கம் : முன்பே தீர்மானிக்கப்பட்ட திட்டப்படி கலந்திருக்கும் மிக முக்கியமான தரவுகளைப் பெறுவதற்கான குறியீட்டு முறை.

data encryption key : தரவு மறையாக்கக் திறவி : ஒரு தரவை மறையாக்கம் (encryption) செய்யவும், மறைவிலக்கம் (decryption) செய்யவும் பயன்படுத்தப்படும் மறைக்குறியீடு.

data encryption standard : தரவு குறியீட்டு முறை தரவரைவு : தரவு முறைக் குறியீட்டுச் செந்தரம் : ஐபிஎம் உருவாக்கிய தரவு பாதுகாப்பு முறை, தேசிய தரங்கள் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இம்முறையில் ஒரு தனிக் குறியீட்டுத் தரவுகளை சேமிப்பிலிருந்து பெற உதவுகிறது.

data entry : தரவு உள்ளிடு : தரவு சேர்ப்பு : 1. தரவுகளை கணினி ஒன்றில் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றும் முறை. அதாவது முனையம் ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா அல்லது துளையிடும் அட்டைகளுக்கு விசைகள் மூலம் அனுப்புதல். 2. கணினி முறை ஒன்றில் நேரடியாகத் தரவுகளை ஏற்றும் முறை.

data entry device : தரவு பதிவுச் சாதனம் : கணினி ஏற்றுக்