பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data entry form

385

data/fax modem


கொள்ளும் வகையில் தரவு களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம்.

data entry form : தரவு உள்ளீட்டுப் படிவம் : தரவு பதிவுப் படிவம்.

data entry operator : தரவு உள்ளிட்டாளர் தரவுப் பதிவு ஆள் : குறிப்புப் பதிவாளர் : விசைப் பலகைச் சாதனத்தைக் கணினி ஒன்றில், தரவுகளைப் பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகிறவர். அவர் பெரும்பாலும் கணினியை இயக்கும் குழுவில் ஒரு உறுப் பினராக இருப்பார். கணினி முறையில் தரவுகளைப் பதிவு செய்யும் பொறுப்பு அவருடையது.

data entry programme : தரவுப் பதிவுச் செயல்முறை : விசைப் பலகையிலிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தரவுகலைப் பெற்று, அவற்றை கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல் முறை. இது நாளது நிலைக்குக் கொணர்தல், வினவுதல், செய்தியறிவித்தல் ஆகியவற்றைச் செய்திடும் ஒரு பயன் பாட்டின் ஒரு பகுதி யாக இருக்கலாம். இந்தச் செயல் முறை, தரவுத் தளத்தில் தரவை நிலை பெறச் செய்கிறது. உட்பாட்டுப் பிழைகள் அனைத்தையும் சோதனை செய்கிறது.

data entry specialist : தரவு பதிவு வல்லுநர் : கணினி ஒன்று வகைப்படுத்துவதற்குத் தரவுகளை வழங்குவதற்குப் பொறுப்பான நபர்.

data export : தரவு ஏற்றுமதி : எழுதப்பட்ட தளங்களை ஒரு தரவு அடிப்படையிலிருந்து மற்றொரு நிரல்தொகுப்பில் பயன் படுத்தக்கூடிய வகையில் மாற்றுவதற்கான திறன். கடிதங்கள், அறிக்கைகள், விரிநிலைத்தாள்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான தொகுப்புச் சொற்களை வகைப்படுத்துவது தரவு இறக்குமதிக்கு எதிர்நிலையானது.

data facts தரவு மெய்ம்மை : தரவுகளுக்கான மூலச்செய்திகள்.

data/fax modem : தரவு/தொலை நகல் இணக்கி : துண்மித் தாரை



25