பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DCTL

403

DDE


கம். விண்டோஸ் அடிப்படையிலான பிணையங்களில் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குத் துணை புரியும் ஆக்கக் கூறுகள் தமக்குள்ளே எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை இத்தொழில் நுட்பம் வரையறுக்கிறது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புக்குத் தேவையான பல்வேறு ஆக்கக் கூறுகள் ஒரு பிணையத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பகிர்ந்தமைவதை இத் தொழில் நுட்பம் சாத்தியமாக்குகிறது. பயனாளரின் பார்வையில் அத்தொகுப்பு அனைத்து ஆக்கக்கூறுகளும் ஒருங்கினைக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பயன்பாடாகவே தோன்றும்.

DCTL : டிடிசி : Dlrect Coupled Transister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான் சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள்.

DDC : டிடிசி : காட்சித் தரவுத்தடம் என்று பொருள்படும் Display Data Channel என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியின் வரை கலை காட்சித்திரையை மென் பொருள் மூலம் கட்டுப்படுத்துவதை இயல்விக்கிற வீஸா (VESA) தரநிர்ணயம். டி. டி. சி-யின் கீழ், காட்சித் திரைக்குரிய பண்பியல்புகள் வரைகலைத் துணை முறைமைக்கு உணர்த்தப்படுகின்றன. அதனடிப்படையில் திரைக்காட்சி வடிவமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கணினிக்கும் காட்சித் திரைக்குமிடையே ஒர் இருவழி தொடர் புத்தடம் உருவாக்கப்படுகிறது.

DDD : டிடிடி : நேரடித் தொலைவு அழைப்பு Direct Distance Dialing என்பதன் குறும்பெயர். நேரடித் தொலைதுார அழைப்பு என்பதாகும். தொலைபேசி இயக்குபவரின் உதவியில்லாமல் இவ்வசதியைப் பயன்படுத்தி வெகு தொலைவில் உள்ள தொலை பேசியுடன் தொடர்பு கொள்ள இயலும் தரவுத் தொலைத் தொடர்புக்கும் இவ்வசதி பயன்படுகிறது.


DDE : டிடிஇ : இயங்குநிலைத் தரவு பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண் டோஸ் மற்றும் ஒஎஸ்/2 ஆகிய வற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொகுப்புகள் தமக்கிடையே தரவுப் பரிமாற்றம் செய்துகொள்ளும் முறை. விண் டோஸ் 3. 1-ல் ஒஎல்இ (OLEObject Linking and Embedding)