பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digital transmission

442

digital video disc-ROM


கலைகளையும், வரைபடம் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகைக் கீலுடைய கரம். இது கணினிக்குத் தரவுகளை அனுப்புகிறது.

digital transmission : இலக்கமுறை அனுப்பீடு : ஈரிலக்க வடிவில் ('0' மற்றும் 1) தரவுகளை அனுப்புவதற்கான ஒர் அனுப்பீட்டு முறை. இது அலைவு வடிவிலிருந்து வேறுபட்டது. குறுகிய தொலைவுகளுக்கு மட்டும் இலக்கமுறை அனுப்பீட்டு முறையைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு : ஒரு உள்ளுர்ப் பகுதி இணையம்.

digital versatile disk : இலக்கமுறைப் பல்திறன் வட்டு.

digital video disc : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு;எண்ணுரு நிகழ்பட வட்டு : அடுத்த தலைமுறை ஒளிவட்டுத் சேமிப்பகத் தொழில்நுட்பம். ஒரு குறுவட்டில் கேட்பொலி, ஒளிக்காட்சி மற்றும் கணினித் தரவு ஆகியவற்றை ஒருசேரச் சேமித்து வைக்க இத்தொழில்துட்பம் உதவுகிறது. வழக்கமான குறுவட்டை விட அதிகமான தரவுகளை ஒரு இலக்கமுறை ஒளிக்காட்சி குறுவட்டு சேமிக்க முடியும். ஒருபக்க ஒரடுக்கு வட்டில் 4. 7 ஜி. பி வரை தரவைச் சேமிக்க முடியும். ஒருபக்க ஈரடுக்கு வட்டில் 8. 5 ஜி. பி வரை சேமிக்கலாம். இருபக்க -ஈரடுக்கு வட்டில் 17 ஜி. பி வரை சேமிக்கலாம். இந்த வட்டுகளைப் படிக்க தனியான இயக்ககம் (Drive) உண்டு. இந்த இயக்ககம் (Drive) பழைய லேசர் வட்டுகள், குறுவட்டுகள், கேட்பொலிக் குறுவட்டுகள் ஆகிய அனைத்தையும் படிக்கும். டிவிடி (DVI) என்பது தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

digital video disc-erasable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு அழித்தெழுத முடிவது;எண்ணுரு நிகழ்பட வட்டு-அழித்தெழுத முடிவது : பயன்பாட்டுக்கு வரப் போகிற ஒளிக்காட்சி வட்டில் ஒரு வகை நுகர்வோர் இந்த வட்டில் உள்ள விவரங்களை பலமுறை அழித்து மீண்டும் எழுதிக் கொள்ள முடியும்.

digital video disc-recordable : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு பதியமுடிவது;எண்ணுரு நிகழ் பட வட்டு-எழுதமுடிவது : பயன் பாட்டுக்கு வரப்போகின்ற, இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டில் ஒரு வகை. நுகர்வோர் இந்த வட்டில் ஒரு முறை எழுதிக்கொள்ள முடியும்.

digital video disc-ROM : இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு-படிக்க மட்டும்; எண்ணுரு நிகழ்