பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

direct data organization

448

direct screen copy


direct data organization : நேரடித் தரவு அமைவாக்கம் : இயற்பியல் தரவு ஊடகத்தினுள் தருக்க முறைத் தரவுக் கூறுகள் குறிப்பின்றிப் பகிர்மானம் செய்யப்படுகிற ஒரு தரவு அமைவாக்க முறை. எடுத்துக் காட்டு தருக்கமுறைத் தரவு மற்றும் பதிவேடுகளை ஒரு காந்த வட்டுக் கோப்பின் மேற்பரப்பில் குறிப்பின்றிப் பகிர் செய்தல். இதனை 'நேரடி அமைவாக்கம்' (Direct organization) என்றும் அழைப்பர்.

direct digital colour proof : நேரடி இலக்கமுறை வண்ண மெய்ப்பு.

direct distance dialing : நேரடி தொலைதூர அழைப்பு.

direct file organization : நேரடி கோப்பு அமைவாக்கம் : ஒவ்வொரு பதிவேடுகளையும் தனித்தனியே அணுகக்கூடிய அமைவாக்கம்.

direct file processing : நேரடிக் கோப்புச் செய்முறைப்படுத்துதல் : ஒரு பதிவேட்டு விடைக் குறிப்பினைப் பயன்படுத்தி, அப்பதிவேட்டினை நேரடியாக அணுகுவதற்குப் பயனாளரை அனுமதிக்கிற செயல்முறை.

direct input/output : நேரடி உள்ளீடு/வெளியீடு : ஒரு கணினிப் பொறியமைவுக்குள் தரவுகள் உள்ளிடுவதற்கு அல்லது கணினிப் பொறியமை விலிருந்து எந்திரம் படிக்கக்கூடிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல் வெளிப்படுத்து வதற்கான முனையங்கள் போன்ற சாதனங்கள்.

directive : பொதுஆணை;பணிப்பு.

Direct Memory Access (DMA) : நேரடி நினைவக அணுகல் (டிஎம்ஏ) : மையச் செயலக அலகின் தலையீடு இல்லாமல் உட்புற நினைவகத்திலிருந்து வெளிப்புற சாதனங்களுக்கு தரவுகளை நேரடியாக மாற்றல் செய்யும் முறை.

direct mode : நேரடி முறை.

direct processing : நேரடி செயலாக்கம் : ஒரு கணினி அமைப்பானது, தரவு பெறப்பட்ட உடனேயே அதனை செயற்படுத்துவது. ஒத்தி வைக்கப்பட்ட செயலாக்கத்துக்கு மாறானது. அதில், தரவு, பகுதி பகுதியாக சேமிக்கப்பட்டுப் பிறகு செயலாக்கம் நடைபெறுகிறது.

direct recovery plan : நேரடி மீட்புத் திட்டம்.

direct screen copy device : நேரடித் திரைப்படியெடுப்புச் சாதனம் :

முனையத் திரையில் காண்பவற்றை அப்படியே படியெடுக்கும் ஒரு சாதனம்.