பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electrical schematic

512

electromagnet


மைப்புகள் மூலம் வேறு ஒரு இடத்துக்கு அனுப்பப்பட்டு, பெறுகின்ற பொருளில் விளங்குவதற்கு ஏற்ற வகையில் மீண்டும் மாற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முறை.

electrical schematic : மின்சார திட்டமுறை : வன்பொருள் மின் சுற்று அல்லது அமைப்பின் தருக்கமுறை வரிசையை வழக்கமான குறியீடுகளைக் கொண்டு குறிப்பிடும் வரை படம். கணினி உதவிடும் வடிவமைப்பிலும் இதை அமைக்க முடியும்.

electrically operated computer : மின்னியக்கக் கணினி.

electric bulb : மின்குமிழ்.

electroluminescent : மின்சுடரொளி : செறிவான, தெளிவான உருக்காட்சியையும் அகன்ற பார்வைக் கோணத்தையும் அளிக்கிற தட்டையான சேணக் காட்சி. இது, ஓர் x அச்சு மற்றும் y அச்சுச் சேணத்திற்கிடையே ஒரு மெல்லிய பாஸ்வரப் படலத்தைக் கொண்டிருக்கிறது. x - y ஆயங்களில் மின்னேற்றப்பட்டதும், அதனையொட்டிய பகுதியிலுள்ள பாஸ்வரம், கணினியில் காணக்கூடிய ஒளியை உமிழ்கிறது. பாஸ்வரம் பொதுவாக பழுப்பு நிறமாக இருக்கும். பச்சைப் பாஸ்வரமும் பயன்படுத்தப்படுகிறது.

electroluminescent display : மின் ஒளிர்வு திரைக்காட்சி : மடிக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சியில் ஒருவகை. செங்குத்து மற்றும் கிடைமட்ட மின்வாய்களுக்கு (electrodes) இடையே ஒரு பாஸ்பர் அடுக்கு அமைக்கப்பட்டிருக்கும். மின்வாய்கள் எக்ஸ்-ஒய் ஆய அச்சுகளாகச் செயல்படுகின்றன. இரண்டு மின்வாய்களும் மின்னூட்டம் பெறும்போது, அவற்றின் குறுக்குவெட்டுப் புள்ளியில் அமைந்த பாஸ்பரஸ் ஒளியை உமிழும். மின்ஒளிர்வுத் திரைக்காட்சி ஏனைய காட்சித்திரைகளை விட விரிவான பார்வைக் கோணத்தையும் தருகின்றன. தற்போது இத்தகைய காட்சித் திரைகளுக்குப் பதில் இயங்கணி (active matrix) எல்சிடி திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

electrolysis : மின்பகுமம் : ஒரு வேதிக் கூட்டுப் பொருளினூடே (Chemical Compound) மின்சாரதைச் செலுத்தி, மூலத் தனிப் பொருட்களாகப் பிரிக்கும் செயலாக்கம.

electromagnet : மின்காந்தம் : மின்விசை மூலம் ஆற்றலூட்டப்