பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electronic office

518

electronic smoke trails


electronic office : மின்னணு அலுவலகம் : | கணினி மற்றும் செய்தி தரவு தொடர்பு தொழில் நுணுககங்களைச் சார்ந்து செயல்படுகின்ற அலுவலகம்.

electronic paper : மின்னணுத் தாள் : மின்னணுக் காகிதம்.

electronic pen : மின்னணு எழுதுகோல் : நிரலாக்கத் தொடர் கட்டுப்பாட்டில் கத்தோட் கதிர்க் குழாயுடன் சேர்ந்து தகவலை உள்ளிடும் அல்லது மாற்றும் பேனா போன்ற ஒரு எழுது பொருள். ஒளிப்பேனா என்றும் அழைக்கப்படுகிறது.

electronic point of sale (EPOS) : மின்னணு விற்பனை முனையம்.

electronic power supply : மின்னணு மின் வழங்கல் : குழாய்கள் மற்றும் அரைக் கடத்திச் சாதனங்களில் உள்ள மின்னணு மின்சுற்றின்போது மின்சார வோல்டேஜ்களில் அலைகளின் இயக்கத் துக்குத் தேவையான மின்சக்தியை வழங்கும் வேலையில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சக்தியின் மூலாதாரம்.

electronic printer : மின்னணுவியல் அச்சடிப்பி : அச்சிடும் செயல்முறையைக் கட்டுப்படுத்து வதற்கு லேசர் அச்சடிப்பி, வரிவாரி அச்சடிப்பி போன்ற மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பி.

electronic publishing : மின்னணு பதிப்புமுறை : அச்சிடுதல் தவிர பிற வகையில் எளிதில் தொகுக்கவும் கூடுதல் வசதி பெறவும் ஏற்ற வகையில் தகவலை அனுப்ப அல்லது சேமிக்கத் தேவையான பலவகை நடவடிக்கை களை உள்ளடக்கிய தொழில்நுட்பம். கல்வி மென் பொருள் வட்டுகள், கல்வி மென்பொருள் பேழை கள், நேர்முக தரவுத் தளங்கள், மின்னணு அஞ்சல் ஒளிச் செய்தி, தொலைச் செய்தி, ஒளிநாடா பேழை கள், ஒளிவட்டுகள் போன்ற பல முறைகளில் தரவு சேமித்து அனுப்பப்படுகிறது.

electronics : மின்னணுவியல் : வாயுக்கள் அல்லது வெற்றிடம் அல்லது அரைக் கடத்திப் பொருட்கள் மூலமாகச் செல்லும் மின்சக்தியைக் கட்டுப்படுத்தி இயக்குதல் தொடர்பான அறிவியல், தொழில் நுட்பப் பிரிவு.

electronic shopping : மின்னணு கடைச் செலவு.

electronic signature authenticator software : மின்னணு கையெழுத்து சான்றுறுதி மென் பொருள்.

electronic smoke trails : மின்னணுவியல் புகைத் தடங்கள் :