பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

encrypted message

530

end capture


encrypted message : உரு மறைந்த தரவு : மெய்யுரு மாற்றிய தகவல்.

encryption : இரகசியக் குறியீடு அமைத்தல் : மறைக் குறியீடாக்கல் : உருமாற்றியமைத்தல் மீண்டும் மாற்றியமைக்கும் விசையால் மாற்றினால் ஒழிய புரியாத வகையில் தரவுகளைக் குறியீடாக அமைத்தல்.

encryption algorithm : மறையாக்கக் கணிமுறை;மறையாக்கப் படிமுறை.

encryption key : திறவு கோல்.

encryption process : உருமாற்று முறை.

encyclopedia : கலைக்களஞ்சியம்.

end : முடிவு : ஒரு செயல்முறையின் முடிவில் நிறைவேற்றப் படவேண்டிய, அறிக்கைகளின் முடிவினைக் குறிக்கிற ஒரு கட்டளைச் சொல்.

end around carry : தொகு எண் சுற்றிய முனை : மிக முக்கிய இலக்கத்தின் இடத்திலிருந்து, மிகக்குறைந்த முக்கியத்துவமுடைய இலக்க இடத்திற்குக் கொண்டு செல்லுதல்.

end around shift : முடிவு சுற்று நகர்வு;ஓரச் சுழல் நகர்வு கணினிச் செயல்பாட்டின்போது நுண்செயலியின் பதிவகங்களில் துண்மிகளின் நகர்வு நிகழும். (எ-டு) : 01000101 என்ற துண்மி களில் ஒருமுறை இடப்புற நகர்வு நேர்ந்தால், 1000l010 என்ற விடை கிடைக்கும். இடப்புறமுள்ள ஒரு துண்மி நீங்கி வலப்புறம் 0 என்னும் துண்மி சேரும். 101. 01. 100 என்பதில் வலப்புறமாக நகர்வு நிகழ்ந்தால் 01. 01. 01. 10 என்பது கிடைக்கும். இவ்வாறு ஓரமாய் இருக்கும் துண்மி நீங்காமல் அது மறுமுனையில் சென்று சேருவதை முடிவு சுற்று அல்லது ஓரச் சுழல் நகர்வு எனலாம். 0010100 என்பது வலது ஓரச் சுழல் நகர்வில் 10010100 என்றாகும். அதாவது வலது ஓரத்திலுள்ள 1 என்ற துண்மி நகர்ந்து வெளியேறி அது இடப் புறம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

en dash : என் டேஷ் : 1990-92 என்று ஆண்டுகளைக் குறிக்கவும். இரட்டை அடைசொல் அல்லது இரட்டைச் சொற்களிலும் (pre-civil war) இடம் பெறும் என்னும் நிறுத்தற்குறி. தட்டச்சு எழுத்தின் உருவளவுகளை அளவீடு செய்யும் அலகு. என்-இடவெளி எம்-இடவெளியில் பாதி. என்-இடவெளி அளவில் அமைந்த, என் டேஷ் ஆகும்.

end capture : பிணைப்பை விடு.