பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

equalization

541

ergonomic keyboard


equalization : சரிநிகராக்கம் : உருத்திரிபினைக் குறைத்து, நெடுந் தொலைவுகளில் சைகை இழப்பீட்டை ஈடுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் உத்திகள்.

equate directive : சமவாக்கு பணிப்பு.

equation : சமன்பாடு : ஒரே எண்ணைக் குறிப்பிடும் இரண்டு கணித வெளியீடுகளுக்கிடையில் சமன்பாடு குறியீட்டைப் பயன்படுத்தும் கணிதச் சொற்றொடர். A யுடன் 10 சேர்த்தால் 6 என்ற சமன்பாட்டில் A-யின் மதிப்பு 4 ஆகும்.

equipment : கருவி : ஒரு கணினி அமைப்பின் பகுதி.

equipment bay : கருவி இருப்பிடம் : மின்னணுக் கருவி பொருத்தப் படுகின்ற பெட்டி அல்லது அலமாரி.

. er : . இஆர் : இணையத்தில் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். எரித்திரியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கிறது.

erasable : அழிக்கவல்ல.

erasable optical storage : அழிதகு ஒளியியல் சேமிப்பகம்.

erasable storage : அழிக்கக்கூடிய சேமிப்பகம்;அழிக்கக்கூடிய தேக்ககம் : அழித்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய சேமிப்பு ஊடகம். காந்தவட்டு, உருளை, நாடா போன்ற ஊடகங்களை அழித்து மீண்டும் பயன்படுத்தலாம். துளையிடப்பட்ட அட்டைகள் அல்லது காகித நாடாக்களை இவ்வாறு செய்ய முடியாது.

erase : அழி : மீண்டும் வேறொன்றை வைக்காமல் தகவல்களை சேமிப்பகத்திலிருந்து நீக்குதல்.

erase/delete/remove : அழி;நீக்கு/அகற்று.

erase head : அழிக்கும் முனை : வீட்டு உபயோக, நாடாப்பதிவு கருவியில் புதிய செய்தியினைப் பதிவு செய்யும் முன்பு நாடாவில் ஏற்கனவே பதிவு செய்ததை அழிக்கும் முனை. மையம் இல்லாத காந்தமயப்பட்ட பெரிக் அமில மேற்பரப்புகளான நாடா, அட்டை அல்லது வட்டில் அழிக்கும் முனையானது எழுதும் முனை அத்தகைய செயலைச் செய்யும் முன்பு அழித்துவிடும்.

eraser : அழிப்பி;அழிப்பான்.

ergonomic keyboard : சூழல் தகவமை விசைப்பலகை;தகவமை விசைப்

பலகை : இடைவிடாமல் தொடர்ந்து விசைப்பலகை