பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AL

60

algorithm



பொருள்படும் Advanced Executive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனம் தனது பணிநிலையக் கணினிகளிலும், சொந்தக் கணினிகளிலும் செயல்படுத்திய இயக்க முறைமை - யூனிக்ஸின் இன்னொரு வடிவம்.


AL : சில்லுமொழி : Assembly Language என்பதின் சுருக்கம்


alarm beep : எச்சரிக்கை ஒலி


alert box : எச்சரிக்கும் பெட்டி : ஒரு திரைக்காட்சி சிறிய சாளரம்

எச்சரிககும் பெட்டி


போன்று இருக்கும். பயனாளரின் அடுத்த இயக்கம் தவறானதாக இருந்தால் இது எச்சரிக்கும். சுட்டி (மவுஸ்) பொத்தானை அழுத்தியோ அல்லது விசை மூலம் நிரல் கொடுத்தோ இதற்குப் பதில் தரலாம்.


alert messages : எச்சரிக்கைச் செய்திகள் : செய்யப்படும் இயக்கம் தவறானது அல்லது இயலாதது என்பதை உணர்த்தும் செய்திகள்.


algebra : அல்ஜீப்ரா; இயற் கணிதம் : ஒரு வகைக் கணிதம். இதில் எழுத்துகள் எண்ணிக்கை அலகுகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. எண் கணித விதிகளின்படி இம்முறை கையாளப்படுகிறது.


algebra, boolean : பூலியன் இயற் கணிதம்.


algebra of logic : தருக்க முறை அல்ஜீப்ரா; தருக்க முறை இயற்கணிதம் : இதில் தருக்க முறை உறவுகள் இயற் கணித அல்ஜீப்ரா சூத்திரங்களாக வெளியிடப்படுகின்றன. ஜார்ஜ் பூல் இதனை அறிமுகப்படுத்தினார்.


ALGOL : அல்கால் : 1960களில் உருவாக்கப்பட்ட கணினி மொழி. அல்கோரித்மிக் மொழி என்பதன் குறும் பெயர். பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற் கணிதமுறைகளைச் செய்யப் பயன்படும் உயர்நிலை கணினி மொழி.


algorithm : கணி முறை; தருக்கப்படிமுறை : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை