பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

general purpose register

646

generator, report


படும் செயல்வரைவுபடுத்தும் மொழி. FORTRAN, COBOL, BASIC, PASCAL முதலிய பொது செயல்வரைவு மொழிகள் அனைத்தும் இதற்கு எடுத்துக்காட்டுகள். இது, "தனி நோக்க மொழி (Special Purpose Language) என்பதிலிருந்து வேறுபட்டது.

general purpose register (CPU) பொதுநோக்கப் பதிவேடு : பொது நோக்குப் பதிவகம் : பட்டியலிடல், முகவரியிடல், கணித மற்றும் தருக்கமுறை இயக்கங்களுக்குப் பயன்படும் மையச் செயலக அலகின் பதிவேடு.

general section : பொதுப்பிரிவு.

generate : உருவாக்கு;ஆக்கு : உருவாக்கி ஒன்றின் பயனுக்காக நிரலாக்கத் தொடரை அமைத்தல். அந்த நிரலாக்கத்தொடர் சில வரையறைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட குறியீட்டுத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுத்து அமைக்கப்படும்.

generation : தலைமுறை : கணினி தொழில்நுட்ப முன்னேற்றத்தினைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல். முதல் தலைமுறைக் கணினிகளில் வெற்றிடக்குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளும், நான்காம் தலைமுறைக் கணினிகளில் எல்எஸ்ஐ, விஎல் எஸ்ஐ மின்சுற்றுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

generation computer, first : முதல் தலைமுறைக் கணினி.

generation computer, fourth : நான்காம் தலைமுறைக் கணினி.

generator : ஆக்கி : குறிப்பிட்ட பணிகளைச் செய்துமுடிக்க பல வழக்கச் செயல்முறைகளைக் கொண்டதாக அமைக்கப்படும் மென்பொருள் பொதி. இந்த வழக்கச் செயல்முறைகளில் உள்வீட்டு அளவுகோலை ஏற்றுக்கொண்டு தேவைப்படும் அளவுகோலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கப்படும். அறிக்கை தயாரிப்பது போன்ற குறிப்பிட்ட தலைப்புகளில் பணிகளைச் செய்து முடிக்க இது உதவும். சாதாரணமாக, பணியை வரையறுத்து அளவுகோல் தொகுதிகளை நிரப்புவது பயனாளரின் பணியாக இருக்கும்.

generator, clock signal : கடிகார சமிக்கை ஆக்கி.

generator, number : எண் ஆக்கி.

generator, report : அறிக்கை ஆக்கி.