பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyphenation Zone

720

hz



சொற்களை இருகூறாக்கி இறுதியில் ஒர் ஒட்டுக் குறியைச் சேர்க்கும் வசதி விருப்பத் தேர்வாக இருக்கும். ஒரு நல்ல சொல்லொட்டு நிரல், ஒரு பத்தியில், தொடர்ச்சியாக மூன்று வரிகளுக்கு மேல் வரி இறுதியில் சொற்களைப் பிரிக்காது. அப்படித் தேவைப்படின் பயனாளருக்குத் தெரிவித்து அவரின் ஒப்புதலின் பேரில் முடிவு செய்யும்.

hyphenation zone : இணைப்புக் குறியீட்டு மண்டலம் : வலது ஒர விளிம்பிலிருந்தான தொலைவு. இதனுள் ஒரு சொல்லுக்கு இணைப்புக் குறியிடலாம்.

hypothesis : ஊகம்; தற்கோள்; விளக்கம்.

hysteresis : தயக்கம் : ஒரு விளைவு ஒன்றுக்கான மொழி. அந்த விளைவுக்கான காரணத்தின் பின்புலமாக உள்ளது. அதேபோல மின்காந்தப் பொருளை துருவ நெறிப்படுத்த மொழி இயலாததாக உள்ளது. மின்காந்தமயமாக்கும் சக்தி அதற்கு இல்லை.

hytelnet : ஹைடெல்நெட் : டெல் நெட் மூலமாக இணைய வளங்களைத் தேடிப் பெற ஒரு பட்டித் தேர்வு மூலம் வாய்ப்புத் தரும் நிரல் மூலம் இயக்க முடியும்.

Hz : ஹெச் இலட் : ஒரு வினாடிக்கான மின்காந்த அலைச்சுற்று என்பதைக் குறிக்கும் ஹெர்ட்ஸ் என்பதன் குறும் பெயர்.