பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I

721

IBI


I

'IAC : ஐஏசி : 'தகவல் பகுப்பாய்வு மையம் எனப் பொருள்படும் Information Analysis Centre என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிடைக்கின்ற அறிவியல் தொழில்நுட்ப தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க நாட்டின் பாதுகாப்புத்துறை உருவாக்கியுள்ள பல்வேறு அமைப்புகளுள் இதுவும் ஒன்று. வரலாற்று, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தரவுகள் உட்பட ஒட்டுமொத்த அறிவுத் தளங்களை (knowledge bases) உருவாக்கிப் பராமரிக்கும் பணியை ஐஏசி-க்கள் செய்கின்றன. மேலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான பகுப்பாய்வுக் கருவிகளையும் நுட்பங்களையும் உருவாக்கிப் பராமரிக்கும் பணியையும் மேற்கொள்கின்றன.

IAL : அயோல் : International Algorithmic Language என்பதன் குறும்பெயர். ஆல்கால் 58 என்று பின்னர் அழைக்கப்பட்டு காலாவதியாகிவிட்ட மொழியின் ஆரம்பப் பெயர்.

I-BEAM : ஐ-உருக்குறி : விண்டோஸில் சொல்செயலி போன்ற தொகுப்புகளில் உரையைத் தொகுக்கும்போது திரையில் தோற்றமளிக்கும் ஆங்கில I-வடிவச் சுட்டுக்குறி. இக்குறியானது, ஆவணத்தில் ஒரு பகுதியை உட்செருக, அழிக்க, மாற்ற, இடம் பெயர்த்தெழுதருக்கும் இடத்தைச் சுட்டுகிறது. ஆங்கில எழுத்து I போலத் தோற்றமளிப்பதால் இவ்வாறு பெயர்பெற்றது.

I-beam pointer : ஐ பீம் சுட்டு : "I"பெரிய எழுத்தின் வடிவமுள்ள வரைகலை பயனாளர் இடைமுகத்தில் உள்ள ஒரு சிறிய அடையாளக் குறி. செய்தித் தொகுப்பில் எந்த இடத்தில் சேர்க்கலாம் என்பதை இது குறிக்கிறது.

IBG : ஐபிஜி : Inter Block Gap என்பதற்கான குறும்பெயர்.

IBI : ஐபிஐ : Inter-Governmental Bureau of Informatics என்பதன் குறும்பெயர். ஐ. நா. சபை, யுனெஸ்கோ அல்லது ஐ. நா. முகமை அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல்பூர்வமான ஆய்வு, கணினிக் கல்வி மற்றும் பயிற்சி, வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கிடை