பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. ie

726

IEPG


எனப் பொருள்படும் internet Digital Subscriber Line என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சாதாரணத் தொலைபேசி இணைப்புக் கம்பி வழியாகவே வினாடிக்கு 1. 1 மெகாபிட் வரை இணையத் தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்ற அதிவேக இலக்கமுறைத் தகவல் தொடர்பு சேவை. ஐடிஎஸ்எல், சேவையானது ஐஎஸ்டிஎன் மற்றும் இலக்கமுறை சந்தாதாரர் தடத் தொழில் நுட்பம் ஆகியவற்றின் கலப்பு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

. ie : . ஐஇ : ஒர் இணைய தளம் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

IE : ஐஇ : 1. தகவல் பொறியியல் எனப்பொருள்படும் Information Engineering என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு நிறுவனத்துக்குள் கணினி அமைப்புகள், பிணையங்கள் உட்பட தகவல் செயலாக்க அமைப்புகளை உருவாக்கி பராமரிப்பதற்கான வழிமுறை. 2. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணைய உலாவி மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பெயர்ச் சுருக்கம்.

IEEE : ஐஇஇஇ : Institute of Electrical and Electronics Engineers என்பதற்கான குறும்பெயர். கணினி முறைமைகளிலும் அவற்றின் பயன்களிலும் தீவிர ஆர்வங்கொண்ட ஒரு தொழில்முறை பொறியமைவு நிறுவனம்.

IEEE 488 : ஐஇஇஇ 488 : பொதுப்பயன் இடைமுகப்பாட்டை (General Purpose Interface Bus-GPIB) -யின் மின்சார வரையறை. பாட்டையின் தரவு மற்றும் கட்டுப்பாட்டுத் தடங்களையும் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட அளவுகளையும் குறிப்பிடுகிறது.

IEEE 696/s-100 : ஐஇஇஇ 696/s-100 : மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தரம் ஒன்றினை அடை யாளம் காணல், கணினி துணைக்கருவி அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் தரப்படுத்தப்பட்டது.

IEEECS : ஐஇஇஇசிஎஸ் : Institute of Electrical and Electronics Engineers Computer Societ என்பதற்கான குறும்பெயர்.

IEPG : ஐஇபீஜி : இணைய பொறியியல் மற்றும் திட்ட