பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IESG

727

if staternent


குழு என்று பொருள்படும் Internet Engineering and Planning Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தின் செல்வாக்கை வளர்த்தெடுப்பது, அதன் தொழில்நுட்ப முனைவுகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இணையப் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குழு.

IESG : ஐஇஎஸ்ஜி : இணையப் பொறியியல் நெறிப்படுத்துங்குழு எனப் பொருள்படும் Internet Engineering Steering Group என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

IETF : ஐஇடீஎஃப் : இணையப் பொறியியல் முனைப்புக்குழு என்னும் பொருள்தரும் Internet Engineering Task Force என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தை எதிர்கொள்ளும் தொழில் நுட்பச் சிக்கல்களை ஆய்வு செய்து அவற்றுக்கான தீர்வுகளை ஐஏபி-க்குப் பரிந்துரை செய்யும் பொறுப்பினை இவ்வமைப்பு வகிக்கிறது. ஐஇஎஸ்ஜி இந்த அமைப்பினை மேலாண்மை செய்கிறது.

IFAc : ஐஎஃப்ஏசி : International federation of Automatic Control என்பதற்கான குறும்பெயர். கட்டுப்பாட்டுக்கான மிக முன்னேறிய அறிவியல் மற்றும் தொழில் துணுக்கம் தொடர்பான ஒரு பன்னாட்டு நிறுவனம்.

IFF : ஐஎஃப்எஃப் (இஃப்) : ஒரு கோப்பு, மாறுகொள் கோப்பு வடிவாக்கத்தில் (Interchange File Format) உள்ளது என்பதைக் குறிக்கும் கோப்புவகைப் பெயர் (File extension). அமிகா பணித்தளத்தில் இது மிகப் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. எவ்வகை தரவுகளைக் கொண்டதாகவும் அக்கோப்பு இருக்க முடியும். வேறு பணித்தளங்களில் பெரும்பாலும் படிமம் (image) மற்றும் ஒலி (sound) கோப்புகளுக்கான வகைப்பெயராகவே இது பயன் படுத்தப்படுகிறது.

IFIP : ஐஎஃப்ஐபீ : lnternational Federation for Information Processing என்பதற்கான குறும்பெயர்.

if statement : if கட்டளை;if கூற்று : ஒரு பூலியன் தொடரின் விடை மெய் (அல்லது சரி) என்ற நிலையில், நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைத் தொகுதியை நிறைவேற்றப் பயன்படும் கட்டளையமைப்பு. பெரும்பாலான நிரலாக்க