பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

imaginary number

732

IMHO



imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகையாகக் குறிப்பிடப்படும் எண் கற்பனை எண் ஆகும். ஒரு மெய்யெண், ஒரு கற்பனை எண் ஆகியவற்றின் கூட்டு கலப்பு எண் (complex number) எனப்படுகிறது. கலப்பெண், a+ib என்ற வடிவில் எழுதப்படும். a, b ஆகியவை மெய்யெண்கள். பொதுவாக நம் வாழ்வில் கற்பனை எண்களை நாம் சந்திப்பதில்லை. நீளம் 15 அடி என்றோ, வினாடிக்கு 150 மெகாபிட் என்றோ நாம் பயன்படுத்தப் போவதில்லை.

ஆனால், மின் பொறியியலில் சிலவகை இணை எண்ணிக்கைகள் ஒரு கலப்பெண்ணிலுள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைப்போலக் கணித முறை யில் கணக்கிடப்படுகின்றன.

imaging : உருத்தோற்றி; படிமமாக்கம் : ஒரு வரைகலை உருத்தோற்றத்தை படமாக்கி, சேமித்து, திரையிட்டு, அச்சிடும் செயல்பாடுகள் உள்ளடக் கிய செயலாக்கம்.

Imaging model : உருவமைப்பு மாதிரி : உருவங்களைக் குறிப்பிடுவதற்கான விதிகளின் தொகுதி.

imaging system : உருத்தோற்ற முறைமை, படிமமாக்க முறைமை.

IMAP4 : ஐமேப்4 : இணையச் செய்தி அணுக்க நெறிமுறை-4 என்று பொருள்படும் Internet Message Access Protocol-4 என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐமேப்பின் அண்மைக்காலப் பதிப்பு. ஒரு அஞ்சல் வழங்கன் கணினியில் (mail server) மின்னஞ்சல் மற்றும் அறிக்கைப் பலகை செய்திகள், (Bulletin Board Message) சேமிக்கப்படுவதற்கான ஒரு வழிமுறையே ஐமேப் unů (POP-Post Office Protocol) என்னும் இன்னொரு முறையும் பயன்பாட்டில் உள்ளது. ஐமேப் முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலிருந்து அஞ்சல்/செய்தி களை மிகச்சிறப்பாக மீட்டெடுக்க முடியும். பாப் முறை யில் இது இயல்வதில்லை.

IMHO : ஐஎம்ஹெச்ஓ; ஐமோ : எனது தாழ்மையான கருத்தின் படி என்று பொருள்படும் in My Humble Opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் நிகழ் நிலைக் கருத்தரங்குகளில் பயனாளர் ஒருவர் முன் வைக்கும் அவரின் சொந்தக்கருத்தினைக் குறிக்கும். ஒரு