பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inference engine

742

Infoprenneur


துவக்கநிலை அலகுகளில் இருந்து முடிவு ஒன்றைப்பெறும் முறை.

inference engine : உய்த்துணர் பொறி; ஊகித்தறி பொறி : முடிவு செய்பொறி  : ஒரு வல்லுநர் முறைமையின் (Expert System) செயலாக்கப் பகுதி. வல்லுநர் முறைமையில் மெய்ம்மைக் கூறுகளும் (Facts) விதிமுறைகளும் (Rules) ஓர் அறிவுத் தளத்தில் (knowledge base) சேமிக்கப்பட்டிருக்கும். ஆய்வுக்கான கருதுகோள்கள் உள்ளீடாகத் தரப்படும்போது அவை மெய்ம்மைகளுடனும் விதிமுறைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, முடிவுகள் பெறப்பட்டு அதற்கேற்ப, வல்லுநர் முறைமை நடவடிக்கையை மேற்கொள்கிறது.

Inference programme : அனுமான நிரல் தொகுப்பு : தரப்பட்ட உண்மைகளிலிருந்து முடிவு ஒன்றைப் பெறும் நிரலாக்கத் தொகுப்பு.

inference rule : உய்த்தறி விதி.

infiled : உள்புலம்.

Infinite loop : முடிவற்ற வளையம் : ஒரு நிரல் தொகுப்பு ஒன்றில் தொடர்ந்து வரும் நிரல்களின் தொகுப்பு. வெளியேறும் நிபந்தனையற்ற வளையம் முடிவற்ற வளையம் என்றும் அழைக்கப்படும்.

infinite number : வரம்பிலா எண்; வரம்பிலி.

Infinite rule : அனுமான விதிமுறை.

Infix notation : உள் பொருத்தப்பட்ட குறியீடு ; பொதுவான கணிதச் சமன்பாடு. இதில் செயல்பாடுகள் பகுதி முறைகளில் அடங்கியுள்ளது. 5 -ஐயும் 3-யும் கூட்டுதலை 5 + 3 என்று குறிப்பிடப்படுகிறது. இதில் முன்னிணைப்புக் குறியீடோ, பின்னிணைப்புக் குறியீடோ கிடையாது.

infobahn : இன்ஃபோபான்; தகவல் விரைவுச் சாலை; தகவல் நெடுஞ்சாலை : இன்ஃபர்மேஷன் (Information), ஆட்டோபான் (Autobahn) ஆகிய இருசொற்களும் இணைந்த கூட்டுச்சொல். இணையத்தை இச்சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆட்டோபான் என்பது ஜெர்மன் நாட்டில் வாகன ஒட்டிகள் சட்டப்படி மிகவேகமாக வாகனத்தை ஒட்டிச் செல்வதற்கான நெடுஞ்சாலை ஆகும்.

Infoprenneur : தகவல் தொழில் முனைவர் : மின்னணுத் தகவலைத் திரட்டிப் பரப்பும் வணிகத்தில் உள்ள நபர்.