பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Informal design review

743

Information float


Informal design review : முறை சாரா வடிவமைப்பு மதிப்பியல்; முறைமையால் வடிவமைக்கப்பட்ட ஆவணத்தை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் முறைமை ஆய்வு, மற்றும் நிரல் தொகுப்புரைகளைக் குறியீடு செய்யும்முன் தேவையான சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவைகளைச் செய்ய மதிப்பிடல்.

Informatics : தகவலியல் : தகவல் தொழில் நுணுக்கத்துக்கு சமமானதாகக் கையாளப்படும் சொல்.

Information : தகவல் : கணினி ஒன்றுக்குள் வழங்கப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்பட்ட பொருளுள்ள பயனுள்ள உண்மைகள். அறிந்த மரபுகளின்படி தரவுகளுக்கு வரையறை செய்யப்பட்ட பொருள்.

Information Analysis : தகவல் ஆய்வு : செய்தி ஆய்தல்.

Information banks : தகவல் வங்கிகள்; குறிப்பிட்ட பயன்பாடுகள் தொடர்பான தகவல்களைச் சேமிக்கக்கூடிய பெரிய புள்ளிவிவர அடிப்படைகள்.

Information bits : தகவல் துண்மிகள் : தரவு தொடர்பில் தகவல் துகாரங்களினால் இத்துண்மிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பிழையைக் கட்டுப்படுத்தும் துண்மிகள் சேர்க்கப்படவில்லை.

information centre : தகவல் மையம் ; ஒரு நிறுவனத்தில் இறுதி பயனாளராக இருப்பவருக்கான ஆதரவு வசதி. பயன்படுத்துபவர்கள் தங்களது சொந்தப் பயன்பாட்டு நிரலாக்கத் தொடர்களை உருவாக்ககற்றுத் தருவதுடன் தங்களது சொந்த தகவல் செயலாக்க பணிகளுக்கும் உதவுகிறது.

information channel : தகவல் இணைப்பு : தகவல் தடம்; தகவல் அலைவரிசை.

Information engineering : தகவல் பொறியியல் : ஒரு நிறுவனத்தில் தகவல் செயலாக்கத்தை உருவாக்கவும், வழிகாட்டவும் பயன்படும் பொருள்கள் மற்றும் செய்முறைகளின் ஒருங்கிணைந்த தொகுதி.

Information explosion : தகவல் பொருத்தம் : எல்லா வகையான தகவல்களின் உற்பத்திப்பெருக்கம், அவற்றின் விரிவு.

Information filtering : தகவல் வடிகட்டல் ; மனித மூளையில் தகவல் செயலாக்கப்படும் போது சில தூண்டல்களைத் திரையிட்டு தேர்ந்தெடுப்பதற்கு மனிதர்கள் பல வகையான கோட்பாட்டு அமைப்புகளைப் பயன்படுத்துதல்.

Information float : தகவல் மிதவை : அனுப்புபவருக்கும்,