பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internal font

774

internal storage


Internal font : உள்ளார்ந்த எழுத்துரு : ஒரு அச்சுப்பொறியில் உரு வாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எழுத்து முகம் கொண்ட எழுத்துகளின் தொகுதி.

Internal fragmentation : அகநிலைத் துண்டிப்பு.

Internal interrupt : உள்ளார்ந்த குறுக்கீடு : செயலாக்கம் மூலம் ஏற்படும் குறுக்கீடு. சான்று : உள்ளீடு அல்லது வெளியீடு அல்லது ஒரு கணித மிகு பிழைக்கான வேண்டுகோள். எதிர்ச்சொல் : external interrupt.

Internally generated data : உள் தோன்றும் தரவு.

Internal memory : உள் நினைவகம்.Internal storage போன்றது.

Internal modem : உள்ளமைந்த மோடெம் : கணினியின் உள்ளே இருந்து கொண்டு நேரடியாக கணினி விரிவாக்க வாயிலில் பொருந்தக் கூடியது.

internal or external command : அகக்கட்டளை அல்லது புறக் கட்டளை.

Internal report : உள்ளார்ந்த அறிக்கை;அக நிலை அறிக்கை : ஒரு நிறுவனத்தின் உள்ளே இருப்பவர்கள் தயாரிக்கும் நிறுவன அறிக்கை. இருப்புக் கணக்கெடுப்பு தரக்கட்டுப்பாடு, சம்பளப்பட்டி போன்றவை இதில் அடங்கும்.

internal schema : அகப் பொழிப்பு;அக உருவரை : ஒரு தரவுத் தளத்திலுள்ள கோப்புகள். அவற்றின் பெயர்கள், அவற்றின் இருப்பிடம், அணுகும் முறைகள், தரவு தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு. அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்கின்ற முப்பொழிப்புக் கட்டுமானம். கொடாசில் (CODASL), டிபிடீஜி (DBTG) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளில் உள்ள பொழிப்புடன் தொடர்புடையது அகப்பொழிப்பு ஆகும். பகிர்ந்தமை தரவுத்தளத்தில், வெவ்வேறு இருப்பிடங்களில் வேறு வேறு அகப்பொழிப்புகள் இருக்க முடியும்.

Internal sort : உள்ளே வகைப்படுத்தல்;அக நிலை வரிசையாக்கல் : ஒரு மைய செயலக அலகுக்குள் இரண்டு அல்லது மேற்பட்ட பதிவுகளை வரிசைப் படுத்துதல். பல்வகைப்படுத்தும் நிரல் தொடரில் முதல் நிலை.

Internal storage : உள்ளார்ந்த சேமிப்பகம்;உள் தேக்ககம் :