பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internal timer

775

International Standard Org.


மையச் செயலக அலகு நேரடியாகக் கட்டுப்படுத்தும் முகவரியிடும் சேமிப்பகம். நிரலாக்கத் தொடர் இயக்கப்படும் போதும் தரவு செயலாக்கம் செய்யப் படும்போதும் நிரல் தொடர்களை சேமிக்கப் பயன்படுகிறது.

Internal timer : உள்ளார்ந்த காலங்காட்டி : முறையான இடை வெளிகளில் பைபியசோ எலெக்ட்ரிக் படிகம் உருவாக்கும் துடிப்புகளைக் கட்டுப்படுத்தும் பதிவு.

international Business Machines Corporation (IBM) : பன்னாட்டு வாணிக எந்திரக் கழகம்.

International Council for Computers in Education (ICCE) : கல்வியில் கணினிகளுக்கான பன்னாட்டுக் கழகம் (ஐ. சி. சி. இ) : கல்லூரிக்கு முந்தைய அளவில் கல்வித் துறையில் கணினியைப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள வர்களைக் கொண்ட பன்னாட்டு நிறுவனம்.

international data links : பன்னாட்டுத் தரவு இணைப்பு.

International Directory of Software : பன்னாட்டு மென்பொருள் திரட்டு : கம்ப்யூட்டர் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வெளியீடு.

International Federation for Information Processing (IFIP) : தகவல் செயலாக்கத்திற்கான பன்னாட்டுப்பேரவை (ஐ. எஃப்ஐபி) : தகவல் செயலாக்கத் துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தொழில்முறை மற்றும் கல்விமுறை சங்கங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட பன்னாட்டு நிறுவனம். மூன்று ஆண்டுகளுக்கொரு முறை உலகின் பல்வேறு பகுதி களில் கூட்டம் நடத்துகிறது.

International Forum for Information Technology in Tamil (INFITT) : உலகத் தகவல் தொழில் நுட்பத் தமிழ் மன்றம் : சுருக்கமாக"உத்தமம்"என வழங்கப் படுகிறது.

international network : உலகளாவிய பிணையம்;பன்னாட்டுப் பிணையம்.

International Standard : பன்னாட்டுத் தரம்.

International Standard Book Number (ISBN) : பன்னாட்டு தர நூல் எண் : ஐஎஸ்பிஎன் என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. நூலகங்களில் பயன்படுத்தப் படும் பட்டைக் குறியீடு.

International Standard Organisation (ISO) : பன்னாட்டு தர நிறுவனம் (ஐஎஸ்ஓ) : அறிவியல் மற்றும் பொறியியல்