பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

International Tele-communi

776

Internet access


பொருள்கள், அமைப்புகளுக் கான பன்னாட்டு தர நிர்ணயங் களை வழங்க உருவாக்கப்பட்ட தன்னார்வ நிறுவனம்.

International Tele-communications union : பன்னாட்டு தொலைத் தொடர்புக் குழுமம்; சர்வதேச தொலை தொடர்புச் சங்கம் : பொதுத்துறை மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொலைபேசி மற்றும் தரவு தொடர்பு அமைப்பு களுக்கான பரிந்துரைகள் மற்றும் தர வரையறைகள் இவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும், பன்னாட்டு அரசுகளின் கூட்டமைப்பு.

Internet : இணையம் : உலகம் முழுவதிலுமுள்ள பிணையங் களின் தொகுப்பு. பிணையங்கள் தமக்குள்ளே டீசிபி/ஐபி நெறி முறைத் தொகுப்புகளின் அடிப் படையில் தகவல்களைப் பரி மாறிக் கொள்கின்றன. இணை யத்தின் இதயமாக விளங்குவது, பெரிய கணுக்கணினிகள் (Nodes) அல்லது புரவன் கணினி களை (Hosts) இணைக்கும் அதிவேகத் தரவு தொடர்புத் தடங்களாலான முதுகெலும்பு (Back bone) ஒத்த அமைப்பே ஆகும். அமெரிக்க நாட்டுப் பாதுகாப்புத் துறை 1969இல் உருவாக்கிய ஆர்ப்பா நெட், இணையத்தின் ஊற்றுக்கண்ணாகும். அணுப்போர் ஏற் படினும் ஆர்ப்பாநெட் முற்றி லும் அழிந்து போகா வண்ணம் உருவாக்கப்பட்டது. பிட்நெட், யூஸ்நெட், யுயுசிபீ மற்றும் என்எஸ்எஃப்நெட் ஆகியவை ஆர்ப்பாநெட்டுடன் காலப் போக்கில் இணைந்துவிட்டன.

Internet access : இணைய அணுகல் இணையத்துடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள் ளல். இருவகையில் இயலும். முதல் வழிமுறை தொலைபேசி + இணக்கி மூலம் ஒர் இணையச் சேவையாளரின் வழியாகத் தொடர்பு கொள்ளுதல். வீட்டுக் கணினிகளிலிருந்து பெரும் பாலான பயனாளர்கள் இந்த முறையிலேயே தொடர்பு கொள்கின்றனர். இரண்டாவது வழிமுறை தனிப்பட்ட இணைப்புத்தடம் (dedicated line) மூலம் ஒரு குறும்பரப்புப் பிணையத்தை இணையத்துடன் இணைத்தல். பிணையத்தில் இணைக்கப்பட்ட கணினிகளில் பயனாளர் தொடர்பு கொள்வர். பெரும் நிறுவனங்கள் இத்தகு இணைப்புகளைப் பெற் றுள்ளன. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்ட கருவி மூலமும் இணையத்தை அணுக முடியும். இன்னும் பரவ லாகப் புழக்கத்தில் வரவில்லை.