பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jovial

808

JPEG


அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களைக் குறித்து வைத்துக்கொள்ள இக்குறிப்பேடு பயன்படும். ஒரு தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைக் குறித்து வைத்துக் கொள்ள முடியும். ஒரு கணினி அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளின் விவரங்கள், அவ்வப்போது நீக்கப்பட்ட கோப்புகளின் விவரங்கள் இவற்றையும் கண்காணித்துக் குறித்துக் கொள்ளலாம். சேமித்து வைக்கப்பட்ட தரவுகளுக்கு இழப்பு அல்லது பழுது ஏற்படுமாயின், இதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பரிசீலித்து மூலத்தரவுகளை மீட்டுருவாக்கம் செய்ய, பொதுவாக இக் குறிப்பேடு பயன்படுகிறது.

Jovial : ஜோவியல் (ஒரு கணினி மொழி)  : Jules Own Version of the International Algorithmic Language என்பதன் குறும் பெயர். அறிவியல், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல் களில் செயல்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட நிரல்தொடர் மொழி. அமெரிக்க விமானப் படையில் அதிகம் பயன் படுத்தப்படுகிறது.

Joystick : இயக்கப்பிடி : மின்னியந்திர விசை. அதை இயக் இயக்கம் போது இடஞ்சுட்டியை (கர்சரை) நகர்த்துகிறது. ஒளிக்காட்சி விளையாட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கணினியுடன் கம்பியால் இணைக்கப்படுகிறது.

Joyswitch : நிலைமாற்றுபடி : ஜாய்ஸ்டிக் போன்ற உள்ளிட்டு - வெளியீட்டுச் சாதனம். இதை எண் திசைகளில் மேல், கீழ். வலது, இடது மற்றும் நான்கு குறுக்குத் திசைகளிலும் எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம்.

JPEG : ஜேபெக் : 1. ஒளிப்பட வல்லுநர்களின் கூட்டுக் குழு