பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/826

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. kp

825

. kz



ஒத்திசைவு கொண்டது. அதே வேளையில் சி-செயல் தளத்தின் கட்டளை வரி திருத்தல் திறனும் கொண்டது.


. kp : கேபீ : ஓர் இணைய தள முக வரி வடகொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


K & R C : கேஆர்சி : Kernighan and Ritchie C என்பதன் குறும் பெயர். அன்சி (Ansi) தர நிர்ணயத்திற்கு இருந்த "சி" மொழியின் பதிப்பு. பிரியன் கெர்னிகன் மற்றும் டென்னிஸ் ரிச்சி உருவாக்கியது.


KSR : கேஎஸ்ஆர் : Keyboard Send / Receive என்பதன் சுருக்கப் பெயர். விசைப்பலகை மற்றும் அச்சுப்பொறியைக் கொண்ட தொலைத் தட்டச்சுப்பொறி.


KSR terminal : கேஎஸ். ஆர் முனையம் : விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையும் பிற முனையங்களிலிருந்து பெறப்படும் தரவுவையும் திரைக் காட்சிக்குப் பதிலாக உள் ளிணைக்கப்பட்ட அச்சுப் பொறியில் வெளியிடும்.


kr : கேஆர் : ஓர் இணையதள முகவரி தென்கொரிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


Kurtz Thomas : குர்ட்ஸ் தாமஸ் : 1964இல் டார்ட்மவுத் கல்லூரியில் ஜான் கெம்னையுடன் சேர்ந்து பேசிக் என்னும் கற்பதற்கு எளிய, அல்ஜீப்ரா கலந்த நிரலாக்கத்தொடர் மொழியை உருவாக்கினார்.


. kw : கேடபிள்யூ : ஒர் இணைய தளமுகவரி குவைத் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.


KWIC : கேடபுள்யூஐசி : Key& Word&ln Context என்பதன் சுருக்கம். சொற்கள் எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தப் படுகின்றன என்பதை வைத்து சொற்கள் மற்றும் சொற்றொடர்களை முன்னதாக தேர்வு செய்து தகவலைப் பட்டியலிடும் ஒரு முறை.


. ky : கேஒய் : ஒர் இணைய தள முகவரி கேமான் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.


. kz : கேஇஸட் : ஒர் இணைய தள முகவரி கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.