பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

library

844

licensing key


விளக்கத் தொகுப்புகளைப் பராமரிப்பவர். 2. எல்லா கணினிக் கோப்புகள் அதாவது தகட்டுக் கற்றைகள் மின்காந்த நாடாக்களை பாதுகாப்பாக வைத்திருப்பவர். காப்பாளர், கோப்பு நூலகர், மென் பொருள் நூலகர், நாடா நூலகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

library : நூலகம் : வெளியான நிரலாக்கத் தொகுப்புகள், வழக்கமான செயல்கள், எப்பொழுதாவது நிறைவேற்றப்படும் பணிகள் ஆகியவைகள் கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இடம். நிரலாக்கத் தொகுப்பு நூலகம் போன்றது.

library automation : நூலகத்தானியக்கம் : நூலக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு கணினி மற்றும் பிற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்துதல்.

library function : உள்ளிணைப்பு செயற்கூறு;நூலகச் செயற் கூறு.

library manager : நூலக மேலாளர் : ஒரு இயக்க முறைமையில் சேமிக்கப்பட்ட நிரல் தொகுப்புகளைப் பராமரிக்கும் நிரலாக்கத் தொகுப்பு.

library routine : நூலக வாலாயம் : நிரலாக்கத் தொகுப்பு நூலகம் ஒன்றில் கையாளப்படும் சோதிக்கப்பட்ட வழ்மை அல்லது நிரல்.

. lib. us : லிப். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி, அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு நூலகத்துக்குரியது என்பதைச் சுட்டும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

licence policy : உரிமக்கொள்கை .

licence agreement உரிம ஒப்பந்தம் : ஒரு மென்பொருள் விற்பனையாளருக்கும் ஒரு பயனாளருக்கும் இடையேயான ஒரு சட்ட ஒப்பந்தம். மென்பொருள் தொடர்பாக பயனாளருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடும். இந்த உரிம ஒப்பந்தம் பயனாளர் மென்பொருள் தொகுப்பை பிரிக்கும்போதே நடைமுறைக்கு வந்துவிடுகிறது.

license contrast : உரிம எதிர்மறை : மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்துவோர் அதனைத் தன்னுடைய கணினியில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கும் சிறுதாள்.

licensing key : உரிம விசை; உரிமத் திறவி, உரிமத் திறவு கோல் : உரிமம் பெற்ற ஒரு மென்பொருளை நிறுவும்போது, நுழைசொல்லாகப் பயன்படும் ஒரு சிறிய எழுத்துச் சரம். உரிமம் பெற்ற மென்பொருளை