பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

life cycle

845

lightness


சட்டத்துக்குப் புறம்பாக நகலெடுப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் உரிமத் திறவு கோலான இந்நுழை சொல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக பயன்படுத்தப்படுகிறது.

life cycle : வாழ்க்கைச் சுழற்சி; ஆயுள் சுழற்சி : நிரல் தொகுப்பு அல்லது முறைமை ஒன்றின் தோற்ற வழி. துவக்கக் கருத்து, உருவாக்கம், அமல் மற்றும் மாற்று ஒன்று உருவாக்கப்படும் வரை அல்லது இனிமேல் பயன்படாது என்ற நிலை ஏற்படும் வரை பராமரிப்பு.

life testing : ஆயுள் சோதனை; வாழ்க்கைச்சோதனை : களத்தில் நம்பகத் தன்மையை உறுதி செய்ய மின்னணு பாகங்களை விரைந்து சோதித்தல்.

LIFO : லிஃபோ : Last In First Out என்பதின் குறும்பெயர். இம்முறையில் தான் பெரும்பாலான நுண்வகைப்படுத்தி நிரல் தொகுப்பு முறைமைகள் செயல்படுகின்றன. கடைசியாக அனுப்பப்பட்ட தரவு அல்லது கட்டளை நிரல் தான் முதலில் பெறப்படுகிறது.

ligature : லிகாச்சர் : (உடலால் தொடக்கூடிய) தனி அலகாக வடிவமைக்கப்பட்ட இரண்டு அல்லது மேற்பட்ட தட்டச்சு முக எழுத்துகள்.

light dots : ஒளிப்புள்ளிகள்.

light emitting diode : ஒளியுமிழ் இரு முனையம் அதற்கு மின்சக்தி அளிக்கப்படும்போது

ஒளியுமிழ் இருமுனையம்

ஒளியுமிழ் இருமுனையம்

ஒளியை உமிழும் ஒரு மின்னணு சாதனம். 'மின்சாரம் இயங்குகிறது என்பதை உணர்த்தும் குறியீடுகளாக கணினிகளிலும் கணினி மென்பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

lightest : மிகு ஒளிர்மை, மிகவும் லேசான.

light guide : ஒளி வழிகாட்டி;ஒளி வழிப்படுத்தி : ஒளி இழைக் கம்பி போன்ற ஒளியைக் கடத்த வடிவமைக்கப்பட்ட கம்பி.

lighting : வெளிர்மை : Olsu6flisou : ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் உள்ள ஒளி அல்லது இருள்.