பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/915

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

means/ends

914

media compatibility


மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

meanssends analysis : வழி/விளைவு-பகுப்பாய்வு : துவக்கப் புள்ளியிலிருந்து முன்னும் பின்னும் இலக்கை நோக்கி ஆய்வு செய்கிறமுறை. வேறு பாடுகளைக் கலையும் முயற்சியின் அடிப்படையில் அமைந்தது.

mean time between failure : கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம் : கருவியின் கோளாறு களுக்கு இடையில் ஆகும் நேரத்தின் அளவு. இயக்கும் நேரங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடப்படும். சான்றாக, ஒரு நிலைவட்டின் கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம் (MTBT) 20, 000 மணிகளாகும்.

measuring divices : அளவீட்டுச் சாதனங்கள்.

mechanical data processing : எந்திரவியல் தரவு வகைப் படுத்துதல் : ஒப்பு நோக்கில் சிறிய பெரிய நிரல் தொகுப்புக்கு ஆட்படாத எந்திரவியல் சாதனங்களைக் கொண்ட தரவுகளை வகைப் படுத்தும் முறை.

mechanical mouse : எந்திர முறை (எலி வடிவ) சுட்டுக் கருவி : ரப்பர் பந்தைப் பயன்படுத்தும் (எலி வடிவ) சுட்டி. அலகின் உள்ளே இருக்கும் சக்கரங்களுக்கிடையே இது சுற்றுகிறது.

mechanical translation : எந்திரவியல் மொழி பெயர்ப்பு : கணினிகள் அல்லது அதேபோன்ற சாதனங்களினால் செய்யப்படும் மொழி பெயர்ப்புக் கான வகைப் பெயர்.

mechanization : எந்திரமய மாக்கல் : மனிதர்களால் முன்பு செய்யப்பட்ட பணிகளை எளிமைப்படுத்த அல்லது எந்திரங்களுக்கு மாற்ற உதவும் எந்திரங்கள்.

media ஊடகம்; தகவல் சாதனம் : கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகங்களாகப் பயன்படுகின்றன. மீடியம் - ஒருமை;மீடியா - பன்மை.

media access control : ஊடக அணுகு கட்டுப்பாடு.

media compatibility : ஊடக ஏற்புத் திறன் : வெற்று வட்டுகளாக ஒரே மாதிரியான வட்டு களைப் பயன்படுத்தும் இரண்டு