பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

media conversion

915

median



அல்லது மேற்பட்ட மாறுபட்ட முறை அலகுகளின் திறன். ஒன்று மற்றொன்று பதிவு செய்வதைப் படிக்க முடியலாம் அல்லது இயலாமற் போகலாம்.

media conversion : ஊடக மாற்றல் : ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து வேறொன்றுக்கு தரவுவை மாற்றல். வட்டிலிருந்து நாடாவுக்கு அல்லது ஒரு வட்டுப் பெட்டியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுதல்.

media eraser : சாதனங்கள் அழிப்பி : ஊடக அழிப்பி : காந்த நாடாக்களை, குறுவட்டுகளை காந்தமிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட சாதனம்.

media failure : ஊடகப் பழுது : பதிவு செய்யும் மேற்பரப்பில் உள்ள குறை காரணமாக வட்டிலிருந்து நாடா போன்ற ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொன்றுக்கு படிக்கவோ, எழுதவோ முடியாத நிலை.

media filter : ஊடக வடிகட்டி' : 1. குறும் பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊட கங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத் தப்படும் சாதனம். (எ-டு) : ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற்கும், உறையிடா முறுக் கிணை (UTP) வடத்திற்கும் இடையே பயன்படுத்தப் படுகிறது. ஊடக வடிகட்டிகள் செயல்பாட்டில் அனுப்பி வாங்கிகளை ஒத்தவை. 2. தரவுப் பிணையங்களில் சுற்றுச்சூழலிலிருந்து வரும் மின்னணு இரைச்சலை வடிகட்டி நீக்க இணைக்கப் படும் சாதனம். (எ-டு) இணையச்சு வட அடிப் படையிலமைந்த புறப் பிணையங்களில் (Extranet) அருகமைந்த மின்னணுக் கருவிகளின் இடையூறு காரணமாய் தரவு இழப்பு ஏற்படாமல் தவிர்க்க ஊடக வடிகட்டிகள் உதவும்.

media interchangeability : ஊடக பரிமாற்றத் தன்மை : ஒரே மாதிரியான இயக்கி உள்ள வட்டுகளை ஒரே எந்திரத்தின் மீது பதிந்து வேறொன்றில் திரும்பப் பயன்படுத்தக்கூடிய அளவு.

median : மீடியன் : ஒரு தரவுத் தொகுதியின் நடு அளவு. கீழ்க்கண்ட தரவு தொகுதியில் மீடியன் மதிப்பு 4. இத்தொகுதியில் 19 வகையறாக்கள் இருப்பதால் இதன் மீடியன் நடுமதிப்பாகும். இரட்டைப்படை எண் தரவுகளின் மீடியன் இரண்டு நடு வகையறாக்களின் சராசரி எண்ணாகும். அந்த எண்கள், 1, 1, 2, 3, 3, 3, 3, 3, 4, 4, 5, 5, 5, 6, 8, 8, 9, 9, 9.