பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

media specialist

916

megahertz


media specialist : தகவல் சாதன வல்லுநர் : சேமிப்புச் சாதனங்களை வகைப்படுத்தவும், பரா மரிக்கவும் பொறுப்பானவர். சிறு வட்டுகள், சிறு வட்டுத் தொகுப்பு, காந்த நாடாக்கள், மற்றும் தொடர்புடைய பொருள்கள்.

medium : ஊடகம் : பொதியுறை வட்டு, காந்த வட்டு, காகித நாடா, காந்த நாடா, துளை அட்டை மற்றும் காகிதம் போன்ற தரவுகளை பதிவு செய்கிற இயற்பியல் பொருள்.

medium model : நடுத்தர மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் தகவலுக்காக 64 கிலோபைட் நினைவக இடமே ஒதுக்கப்படும். நிரல் கட்டளைகளுக்கு ஒரு மெகா பைட்வரை இடம் ஒதுக்கப்படும்.

medium pitch : நடுத்தொனி.

medium scale integration (MSI) : நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு : பெரும் ஒருங்கிணைப் புக்கும் சிறிய அளவிலான ஒருங்கிணைப்புக்கும் இடைப்பட்ட வகை ஒருங்கிணைப்பு வகை.

meg : மெக் : ' மெகாபைட் என்பதற்கான விளிச்சொல்.

mega : மீமிகு : பத்து இலட்சத்தைக் குறிக்கும் முன்னிணைப்பு அல்லது 106. குறும்பெயர் M . Micro என்பதற்கு எதிரானது பத்து இலட்சத்தில் ஒரு பங்கு.

megabit : மீமிகு துண்மி : பொதுவாக ஒரு பத்து இலட்சம் துண்மிகள் அல்லது ஒராயிரம் கிலோ துண்மிகள். சரியாகச் சொன்னால் 10, 48, 576துண்மிகள் அல்லது 1024 கிலோ துண்மிகள்.

Megabyte : மீமிகு எண்மி : குறிப்பாக 20 அல்லது 10, 48, 576 எண்மிகள். 1024 கிலோ எண்மிகள். சராசரியாக ஒரு பத்து இலட்சம் எண்மிகள் அல்லது ஒராயிரம் கிலோ எண்மிகள். குறும்பெயர் MB.

megacycle : மீமிகு சுழற்சி' : ஒரு விநாடிக்குப் பத்து இலட்சம் சுழற்சிகள்.

megaflop : மீமிகு இறக்கம் : ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் பதின்மப் புள்ளி நடவடிக்கைகள். M flops என்றும் அழைக்கப்படுகிறது.

megahertz : மீமிகு மின் அலை வரிசை : மின் அலைவரிசை அலகு. ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகளுக்குச் சமமானது. ஒலிபரப்பு அலை வரிசை அலகு Mhz என்று குறுக்கி அழைக்கப்படுகிறது.