பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/927

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

metacompiler

926

metallic oxide semiconductor


விண்டோஸின் முகப்புப் பக்கம்,உறவுநிலைத் தரவுத்தளம் இவைபோன்ற கட்டமைப்பாயுள்ள தரவுகளின் உள்ளடக்கம் பற்றிய தகவலை விவரிக்கும் ஒரு திறந்தநிலை வடிவம். வரிசைமுறையாக்கம், அகராதிகள் மற்றும் விலைப்பட்டியல்களுக்கு இவ்வடிவத்தைப் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

metacompiler:உயர்மொழி தொகுப்பி;உயர் தொகுப்பி:எழுத்துப் பூர்வமான தொகுப்புகளுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் மொழிக்கான தொகுப்பி. இவை பெரும்பாலும் சொற்றொடர்களைத் தொகுப்பனவாக உள்ளன. ஒரு சிறப்பு முக்கியத்துவம் உடைய புறத் தொகுப்பி. சாதாரணமாக பொதுவான நிரல் தொகுப்புகளை எழுதுவதில் பெரிதும் பயன்படுவதில்லை.

meta-data:உயர்மட்ட தரவு:தரவு பற்றிய தரவு. ஒரு தரவுத் தளத்தின் அமைப்பு, உறுப்புகள்,இடை உறவுகள் மற்ற தன்மைகளையும் விவரிக்கும் விவரம்.

meta data,index:உயர்மட்ட தரவு,அட்டவணை.

meta data interchange specification:மீத்தரவு மாறுகொள் வரன்முறை: தரவுகளைப் பற்றிய தரவுவை அதாவது மீத் தரவுவை பரிமாறிக் கொள்ளல்,பகிர்ந்துகொள்ளல்,மேலாண்மை செய்தல் இவற்றைப் பற்றிய வரன்முறைகளின் தொகுதி.

metafile:உயர்மட்டக் கோப்பு:ஒரு வகையான தரவுக்கு மேற்பட்டதை சேமித்து வரையறுக்கும் கோப்பு. சான்றாக,விண்டோஸ் மெட்டாஃபைல் (WMF)வெக்டர் வரைகலையின் படங்களையும்,பரவு வரைவியல்(rastar) வரைகலை படிவங்களையும், செய்திகளையும் வைத்துக் கொள்ள முடியும்.

metalanguage:மீமொழி;மட்ட மொழி:ஏனைய மொழிகளை விவரிக்கப் பயன்படும் ஒரு மொழி. நிரலாக்க மொழிகளை வரையறை செய்யப் பொதுவாக பேக்கஸ் நவுர் ஃபார்ம்(Backus Naur Form - BNF)என்னும் மீமொழி பயன்படுத்தப்படுகிறது.

metallic oxide semiconductor (MOS):உலோக ஆக்ஸைடு அரைக்கடத்தி: களப் பயன்பாட்டு மின்மப் பெருக்கி (டிரான்ஸ்சிஸ்டர்). இதில் வாயில் மின்முனை வாயிலி லிருந்து ஆக்சைடு திரை ஒன்றினால் தனிமைப்படுத்தப்