பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/929

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. mg

928

micro channel


குறும்பெயர். இங்கு பணிகள் என்பது நிரல் தொகுப்புகளாகும். எண்ணற்ற தொந்தரவுகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தல் என்றும் நகைச் சுவையுடன் குறிப்பிடுவதுண்டு. MVT என்பதற்கு எதிரானது.

. mg : . எம்ஜி : ஒர் இணைய தள முகவரி மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

mget : எம்கெட் : பல்முனைப் பெறுதல் எனப் பொருள்படும் multiple get என்பதன் சுருக்கம் எஃப்டிபீ (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) கிளையன்களில் பயன்படுத்தப்படும் கட்டளை. இதன்மூலம் ஒரு பயனாளர் ஒரேநேரத்தில் பல்வேறு கோப்புகளை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைக்க முடியும்.

. mh : எம்ஹெச் : ஒர் இணைய தள முகவரி மார்ஷல் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

MHZ : எம்எச்இசட் : மெஹ ஹெர்ட்ஜ் என்பதன் குறும் பெயர். விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகள்.

MICR : எம்ஐசிஆர் : 'காந்த மையெழுத்தேற்பு' எனப் பொருள்படும் "Magnetic ink Character Recognition" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முதலெழுத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

micro : நுண்மை;நுண் : 1. பத்து இலட்சத்தில் ஒரு பகுதியைச் குறிக்கும் சொல். நுண் வினாடி (மைக்ரோ செகண்ட்) என்பது, ஒரு வினாடியில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. 2. கணினியில், 'மிக நுண்ணிய'என்று பொருள்படும்;மைக்ரோ கம்ப் யூட்டர்' என்றால், 'நுண் கணினி'என்று பொருள். 'மியூ' (μ) என்னும் கிரேக்க எழுத்து மிகநுண்ணிய ஒன்றைக் குறிக்கும். இது பத்து இலட்சம் என்ற பேரெண்ணுக்கு நேர் எதிரானது.

microcassette : நுண் ஒளிச் சுருள்கள்;நுண்ஒளிப் பேழை : ஒரு சிறிய காந்த நாடாப் பெட்டி. பெயர்கள் போன்ற தரவுகளையும், நிரல் தொடர் களையும் சேமிக்கவும் சில மின் கணக்கீட்டு எந்திரங்களில் பயன் படுத்தப்படுகிறது.

microchannel architecture : நுண் தடக் கட்டுமானம் : ஐபிஎம் பீ. எஸ்/2 கணினிகளில் (25 மற்றும் 30 மாதிரிகள் தவிர) உள்ள பாட்டைகளின் வடி