பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/997

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

996


network device driver

996

networking

முறையில் பிணைய முனைகளை பிணைக்க இது அனுமதிக்கிறது. ஒவ்வொரு முனைக்கும் பல 'சொந்தக்காரர்கள்' இருக்க லாம். மேலும் அதனை அடுத்து எத்தனை தரவு அலகுகளும் இருக்கலாம்.

network device driver : பிணையச் சாதன இயக்கி : பிணையத்தில் இணைக்கப்பட்ட கணினியிலுள்ள பிணையத் தகவி அட்டையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மென்பொருள். இது, பிணைய தகவி அட்டைக்கும் கணினியின் ஏனைய வன்பொருள் மற்றும் மென்பொருளுக்கும் இடையேயான தரவுத் தொடர்பினை ஒழுங்குபடுத்துகிறது.

network diagram : பிணைய வரைபடம்; பிணைய வரிப்படம்.

network directory : பிணையக் கோப்பகம் : குறும்பரப்புப் பிணையத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. பயனாளர் கோப்பகத்தை மட்டுமே அணுகமுடியும். வட்டினில் அக்கோப்பகம் தவிர பிற பகுதிகளையும் பயனாளர் அணுகமுடியுமா என்பது, பிணைய நிர்வாகி அவருக்கு வழங்கியுள்ள அணுகுரிமைகளைப் பொறுத்தது. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் பிணைய கோப்பகம் பகிர்வுக் கோப்புறை (shared folder) என்றழைக்கப்படுகிறது.

network drive : பிணைய இயக்கி : ஒரு பிணையத்தில் பல் பயனாளர்களுக்கும் கணினிகளுக்கும் கிடைக்கும் வட்டு இயக்கி. ஒரு பணிக்குழுவில் உளள பலருக்கான தரவு கோப்புகளை பெரும்பாலும் சேமிக்கிறது.

Network File System : பிணையக் கோப்பு முறைமை : சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறு வனம் உருவாக்கிய பகிர்ந்தமை கோப்பு முறைமை ஆகும். விண்டோஸ் என்டீ மற்றும் யூனிக்ஸ் பணிநிலையங்களின் பயனாளர்கள் தொலைதூரப் பிணையத்திலுள்ள கோப்புகளையும் கோப்பகங்களையும் அணுக முடியும்.

networking : இணைய அமைப்பாக்கம் : 1. தகவல் தொடர்பு வசதிகளின் மூலம் தரவு செயலாக்கப் பணிகளை விநியோகிக்கும் தொழில் நுட்பம்.