பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

distributed processing system

149

.dj


வேறு பணிகள் ஒவ்வொரு கணினியும் ஒவ்வொரு பணியை நிறை வேற்றும் வகையில் பணிச்சுமை பகிர்ந்தளிக்கப்படுகிறது.பணிகளின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு ஒருபெரும் குறியிலக்கை அடைய வழிவகுக்கும்.

distributed processing system:பகிர்ந்தமைத் தரவு செயலாக்க முறைமை.

distributed transaction processing:பகிர்ந்தமை பரிமாற்றச் செயலாக்கம்: ஒரு பிணையத்தின் வழியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் கணினிகள், பரிமாற்றச் செயலாக்கப் பணிகளை தமக்குள்ளே பகிர்ந்து கொள்ளும் முறை.

distribution list:பகிர்மானப் பட்டியல்;வினியோகப் பட்டியல்:ஒரு மின்னஞ்சல் குழு(mailing list)உறுப்பினர்களின் முகவரிப் பட்டியல்.இது லிஸ்ட்செர்வ்(Listserv)போன்ற ஒரு அஞ்சல்குழு மென்பொருளாகவோ, ஒரு மின்னஞ்சலைப் பெறுகின்ற அனைவருடைய முகவரிகளுக்கும் சேர்த்த ஒரு மாற்றுப் பெயராகவோ இருக்கலாம்.

distributive nature:பகிர்வுத் தன்மை; பகிர்ந்தளிக்கும் இயல்பு.

divergence:விலகல்:நேர்பாதையினின்று விலகிச்செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச்செல்லல். 1.கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு குறித்த இலக்கில் ஒருங்கிணைந்து குவியாதபோது இத்தகைய விலகல் ஏற்படுகிறது. 2.விரிதாள் பயன்பாடு போன்ற மென்பொருள்களில் ஒரு நிரலில் தவறான ஒரு வாய்பாட்டின் காரணமாக சுழல் தன்மை ஏற்பட்டு,கணக்கீடு,திரும்பத் திரும்ப செய்யப் படும் நிலை ஏற்படலாம்.ஒவ்வொரு கணக்கீட்டின் போதும் கிடைக்கும் முடிவு, விடையைவிட்டு விலகி விலகிச் செல்லும்.

dividend:வகு எண்;ஆதாயப் பங்கு.

division:பிரிவு.

division, identification:இனங்காண் பிரிவு.கோபால் மொழி நிரலின் ஒரு பகுதி.

divisor:வகுப்பி;வகு எண்.

division by zero:சுழியால் வகுத்தல்;பூச்சியத்தால் வகுத்தல்:வகுத்தல் கணக்கீட்டில் ஒர் எண்ணை பூச்சியத்தால்(0.சுழி)வகுக்க முயலும் போது ஏற்படும் பிழைநிலை.எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தால் எண்ணிலி(infinity)விடையாகும். கணித முறைப்படி கணிக்க முடியாத மதிப்பாகும் இது.அதாவது ஒரு வகுத்தல் கணக்கீட்டில் விகுதி (denominator) மிகச் சிறிதாகிக்கொண்டே போனால் கிடைக்கும் ஈவு பெரிதாகிக் கொண்டே போகும்.விகுதி ஏறத்தாழ பூச்சியத்துக்குச் சமமான மிகச் சிறிய மதிப்பாக இருக்குமெனில், ஈவானது ஒரு கணினியால் கணிக்க முடியாத அளவுக்குப் பெரிய எண்ணாக இருக்கும்.எனவே,பூச்சியத்தால் வகுக்கும் கணக்கீட்டை கணினி அனுமதிப்ப தில்லை.எனவே,நிரலர் இது போன்ற சூழ்நிலை ஏற்படாதவாறு தம்முடைய நிரலில் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல் நிரல் செயல்படாமல் பாதியில் நிற்கும்.

.di:.டிஜே: இணையத்தில்,ஒர் இணைய தளம் டிஜிபவுட்டி