பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

infrared data association

233

initial graphics exchange



அகச்சிவப்புக் கதிர்வீச்சு அதன் அலைநீளத்தின் அடிப்படையில் நான்கு வேறு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

infrared data association : அகச் சிவப்புத் தரவுச் சங்கம் : கணினிகளுக்கும் அவற்றின் புறச்சாதனங்களுக்கும் இடையே அகச்சிவப்புக் கதிர்மூலமான தகவல் தொடர்புக்குரிய தகவல் வரையறைகளை ஏற் படுத்தியுள்ள தொழில் நிறுவனங்களின் ஒர் அமைப்பு. இவை பெரும்பாலும் கணினி உதிரி உறுப்புகள் மற்றும் தகவல்தொடர்புச்சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகும்.

infrared port : அகச்சிவப்புத் துறை : அகச்சிவப்புக் கதிர் உணரும் சாதனத்துடன் தொடர்புகொள்ள ஒரு கணினியில் அமைந்துள்ள ஓர் ஒளியியல் துறை. இணைப்பு வடக் கம்பிகள் இல்லாமலே தகவல் தொடர்பு இயல்கிறது. தற்போதைக்கு சில அடி தொலைவுக்கே தொடர்பு ஏற்படுத்த முடிகிறது. மடிக் கணினிகள், கையேட்டுக் கணினிகள், அச்சுப் பொறிகளில் அகச்சிவப்புத் துறைகள் வந்து விட்டன. தகவல் தொடர்பில் ஈடுபடும் இரண்டு சாதனங்களின் துறைகள் நேராகப் பார்த்துக் கொண்டிருப்பது கட்டாயம்.

inheritance code :மரபுரிமைக் குறி முறை : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒரு பொருளுக்குரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் கூறுகளையும் குறிக்கிறது. எந்த இனக்குழுவிலிருந்து இப்பொருள் மரபுரிமையாக உருவாக்கப்பட்டதோ, அந்த இனக்குழு அல்லது அதன் பொருளிலிருந்து இவை அனுப்பி வைக்கப்பட்டவை ஆகும்.

inhibit தடைசெய் :ஒரு நிகழ் வினைத் தடுத்தல். (எ-டு) கணினியின் புறச்சாதனம் ஒன்றின் குறுக்கீடுகளை (interrupts) தடை செய்தல். அதாவது, அப்புறச்சாதனம் எவ்விதக் குறிக்கீடுகளையும் அனுப்புவதை தடைசெய்வது என்று பொருள்.

.ini : ஐஎன்ஐ : டாஸ் மற்றும் விண்டோஸ் 3.x இயக்க முறைமைகளில் இயக்கத்தை தொடங்கி வைக்கும் முக்கிய கோப்பினை அடை யாளங்காட்டும் வகைப்பெயர் (File Extension). பெரும்பாலும் பயனாளரின் விருப்பத் தேர்வுகளையும், ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் தொடக்க நிலைத் தகவல்களையும் ஐஎன்ஐ கோப்பு தன்னகத்தே கொண்டிருக்கும்.

INIT : தொடக்கு இனிட் : 1. பழைய மெக்கின்டோஷ் கணினிகளில், கணினியை இயக்கும்போது நினைவகத்தில் ஏற்றிக்கொள்ளப்படும் முறைமையின் துணைநிரல். 2. யூனிக்ஸ் இயக்க முறைமையில், முறைமை நிர்வாகி செயல்படுத்தும் ஒரு கட்டளை. 3. ஜாவா குறுநிரல்களில் (Applets) கட்டாயமாக இடம்பெறும் முக்கிய வழிமுறை. குறுநிரல் அழைக்கப்படும்போது இந்த வழிமுறை இயக்கப்படும்.

initial base font: தொடக்க தள எழுத்துரு.

initia! graphics exchange specification : தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை : அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (ANSI) ஆதரவு பெற்ற கணினி வரைகலைக் கோப்பு வடிவாக்கத்தரம். குறிப்பாக, கணினியுதவு வடிவமைப்பு (CAD) நிரல்களில் உருவாக்கப்பட்ட மாதிரியங்