பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

allocation table

29

America Online


அடிப்படையில் இந்தத் தொகுதி அளவு தீர்மானிக்கப்படுகிறது.

allocation table : ஒதுக்கீட்டு அட்டவணை.

allow zero length : வெற்றுச்சரம் அனுமதி.

all purpose computer : அனைத்துச் செயல் நோக்குக் கணினி.

Alpha : ஆல்ஃபா : டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (DEC) ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கிய 64 துண்மி (64-பிட்) நுண்செயலியின் வணிகப் பெயர். 1992 பிப்ரவரியில் டெக்சிப் 21064 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. டெக் நிறுவனத்தின் சிப்புத் தொழில் நுட்பத்தையும் இப்பெயர் குறிக்கிறது. சில வேளைகளில் ஆல்ஃபா சிப்பு பொருத்தப்பட்ட கணினியை ஆல்ஃபா அடிப்படையிலான கணினி எனக் கூறுவர்.

Alpha AXP : ஆல்ஃபா ஏஎக்ஸ்பீ : டெக் நிறுவனத்தின் 64-துண்மி (64-பிட்) ரிஸ்க் சிப்பின் தொழில் நுட்பம் இவ்வாறு அழைக்கப்பட்டது. டெக் நிறுவனம் தான் உற்பத்தி செய்த சொந்தக் கணினிகள் டெக் சிப்பினைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்க ஏஎக்ஸ்பீ என்னும் பெயரைக் குறிப்பிட்டது.

Alpha Box : ஆல்ஃபா பெட்டி; ஆல்ஃபா கணினி : டெக் (DEC) நிறுவனத்தின் ஆல்ஃபா என அழைக்கப்படும் 21064 சிப்பினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.

alpha build : தொடக்க உருவாக்கம்.

alpha test : ஆல்ஃபா சோதனை: ஒரு மென்பொருள் தொகுப்பினை உருவாக்கி முடித்தவுடன் அது சரியாகச் செயல்படுகிறதா எனக் கண்டறிவதற்கு நடத்தப்படும் முதல்கட்டப் பரிசோதனை. மென்பொருள் தயாரிப்புக் கூடத்திலேயே தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் பயனரால் நடத்தப்படும் சோதனை காண்க Beta Test.

alphabet : அகரவரிசை : 1. ஒரு மொழியிலுள்ள எழுத்துகள். 2. ஒரு கணினி மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகையான எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள் மற்றும் பிற சிறப்புக் குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் அகரவரிசை ஓர் உட்குழுவாகும்.

allphabetical sorting : அகரவரிசையாக்கம்; எழுத்தெண் வரிசையாக்கம்.

alphabetic code : எழுத்துக் குறிமுறை.

alphageometric : முதல் வடிவக் கணிதம்.

alphaphotographic : எழுத்தெண் ஒளிக்கீற்று.

alt (key) : மாற்று (விசை).

alternate path routing : மாற்றுவழி திசைவித்தல்.

alway programme : ஆல்வே நிரல்; ஆல்வே செயல்முறை.

always on top : எப்போதும் மேலாக.

ambarsand : உம்மைக்குறி

ambient error : சூழல் பிழை.

ambiguity error : இருபொருள் வழு. இரட்டுறு பிழை.

America Online (AOL) : அமெரிக்கா ஆன்லைன் (ஓர் இணைய நிறு வனம்) : இணையத்தில் மின்னஞ்சல், செய்தி, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பிற சேவைகளை வழங்கும் இணைய தகவல் சேவை நிறுவனம். அமெரிக்காவில்