பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pass by value

335

pathname


நிரல் அழைக்கப்படும் துணை நிரலுக்கு அளபுருவின் முகவரியை (நினைவக இருப்பிடத்தை) அனுப்பி வைக்கும். அழைக்கப்பட்ட துணை நிரல் அளபுருவின் மதிப்பை எடுத் தாளவோ, மதிப்பை மாற்றியமைக் கவோ, அதன் முகவரியைப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.

pass by value : மதிப்பு மூலம் அனுப்பல் : ஒரு துணைநிரல்கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணை நிரலுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைக்கப்பட்ட துணைநிரல் நகல் மதிப்பைப் பயன்படுத்தலாம். மாற்றி யமைக்கலாம். ஆனால் அளபுருவின் மூலமதிப்பை மாற்றியமைக்கமுடியாது.

passive-matrix display: முனைப்பிலா அணி காட்சித் திரை : விலைமலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித் திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப் படுத்தப்படுகின்ற ஏராளமான திரவப்படிகக் கலங்களை (Cells) கொண்டது. ஒரு மின்மப் பெருக்கி ஒரு முழு நெடுக்கை (Column) அல்லது கிடக்கை (Row)யின் படப்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முனைப்பிலா அணித் திரைகள் பெரும்பாலும் மடிக் கணினி கையேட்டுக் கணினிகளில் பயன் படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவை மிகவும் தட்டையாக இருக்கும். ஒற்றைநிற திரைக்காட்சிக்கு இவை தெளிவாக இருக்கும். ஆனால் வண்ணத் திரைக்காட்சி எனில்தெளிவு சற்றுக் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி திரையில் நேரெதிர் நோக்கினால்தான் தெளிவாகத் தெரியும். பிற கோணங்களில் பார்த்தால் தெளிவாக இருக்காது. முனைப்பு - அணி (Active Matrix) திரைக் காட்சிகளில் இக்குறைபாடுகள் கிடையாது. எனினும் முனைப்பிலா அணிக் காட்சித் திரை விலை குறைவானது.

paste : ஒட்டு : ஒர் உரைப்பகுதியை அல்லது ஒரு வரைகலைப் படத்தை ஒர் ஆவணத்திலிருந்து நகலெடுத்து அல்லது வெட்டியெடுத்து அதே ஆவணத்தின் வேறொரு பகுதியில் அல்லது வேறோர் ஆவணத்தில் ஒட்டவைத்தல்.

paste append : புது ஏடாக ஒட்டு.

paste as hyper link: மீத்தொடுப்பாக ஒட்டு.

paste insert : செருகு ஒட்டு.

paste/mix : ஒட்டு/சேர்.

paste special : சிறப்பு ஒட்டு.

path menu : பாதைப் பட்டி : விண்டோஸ் சூழலில் ஒரு பகிர்வுப் பிணைய வளத்தினை அணுக உலகளாவியப் பெயர் மரபுப்படி அதன் பாதையை உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பட்டி அல்லது கீழ்விரி பட்டியல்.

pathname : பாதைப் பெயர் : ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில், நடப்புக் கோப்பகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோப்பினை அணுகக்' குறிப்பிடப்படும் கோப்பகம்/ கோப்புறைப் பெயர்களின் பட்டியல். கோப்பகப் பாதை எனவும் அழைக்கப்படுவதுண்டு. (எ-டு) user work\project\pay.mdb.