பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PDA

338

PDS


விசைகளை அழுத்தும்போது ஒரு தட்டச்சருக்கு கிளிக் என்னும் சத்தம் கேட்கும்.

PDA : பீடிஏ : சொந்த இலக்கமுறைத் துணைவன் என்று பொருள்படும் Personal Digital Assistant என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறுபயன் உள்ளங்கைக் கணினி. குறிப்பிட்ட சில வசதிகளை மட்டும் கொண்டது. நாட்காட்டி,குறிப்பெடுத்தல், தரவுத் தளம், கணிப்பான் போன்ற சில தனிநபர் பயன்பாடுகளையும் தகவல் தொடர்பு வசதியையும் கொண்டது. பெரும்பாலான பீடி.ஏ-க்கள் விசைப் பலகை, சுட்டி போன்ற உள்ளீட்டுக் கருவிகளுக்குப் பதிலாக பேனா அல்லது அதுபோன்ற சுட்டுக் கருவிகளைக் கொண்டுள்ளன. ஆனால் சிலவற்றில் பேனா தவிர தொட்டச்சு செய்யக்கூடிய மிகச்சிறிய விசைப் பலகையும் சேர்த்துப் பயன்படுத்தப் படுகின்றன. தகவலைச் சேமித்து வைக்க, மின்சாரம் அதிகம் தேவைப்படும் வட்டு இயக்ககங்களுக்குப் பதிலாக பளிச்சிடு நினைவகத்தைக் (Flash Memory) கொண்டுள்ளன.

PD-CD drive : பீடி சிடி இயக்ககம்: அழித்தெழுது குறுவட்டு இயக்ககம் எனப் பொருள் படும் Rewriteable DiscCompact Disc Drive என்பதன் சுருக்கும். இது ஒரு சேமிப்புச் சாதனம். ஒரு குறுவட்டு இயக்ககமும், இணைக்கப்பட்ட ஒன்று. அழித்தெழுது ஒளிவட்டுப் பேழைகளில் 650 மெகாபைட் வரை தகவலைச் சேமிக்க முடியும்.

PDD: பீடிடி : கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள் படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறை மையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்பட்ட ஒரு வரைகலைக் கோப்பு. இக் கோப்புகள், அச்சுப்பொறியின் தெளிவு சாரா வடிவமைப்பில் சேமிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படும் அச்சுப் பொறியின் உச்ச அளவு தெளிவு நிலையில் அச்சிடப்படுகின்றன. ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட மூல எழுத்துருக்களை அப்படியே அச்சில் பெறலாம். எனவே பீடிடி ஆவணங்களை அவை உருவாக்கப்பட்ட கணினி அல்லாத பிற கணினிகளிலும் அச்சிட முடியும்.

pdf : பீடிஎஃப்: அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய கையாளத்தகு ஆவண வடிவாக்க (Portable Document Format) முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர். (file extension). ஒரு பீடிஎஃப் கோப்பினை திரையில் பார்வையிட அல்லது அச்சிட, அடோப் அக்ரோபேட் ரீடர் என்னும் இலவச மென்பொருள் உள்ளது.

PDS : பீடிஎஸ் : 1. நேரடி செயலிக் செருகுவாய் எனப் பொருள்படும் Processor Direct Slot என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெக்கின்டோஷ் கணினிகளில் மையச் செயலகத்தின் சமிக்கைகளோடு நேரடியாக இணைக்கக் கூடிய விரிவாக்கச் செருகுவாயைக் குறிக்கிறது. ஒரு கணினியில் செயல் படும் மையச் செயலியைப் பொறுத்து பல்வேறு எண்ணிக்கையிலான பின்கள் மற்றும் பல்வேறு சமிக்கைத் தொகுதி கொண்ட பல்வேறு வகை பீடிஎஸ் செருகுவாய்கள் உள்ளன. 2. இணைநிலை தகவல்