பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pentium

340

Perl


முறைத் துணைவர்கள் (Personal Digital Assistants) எனப்படும் நவீன கணினி வகையின் முன்னோடி மாதிரிகளாக பேனாக் கணினிகள் விளங்குகின்றன.

pentium : பென்டியம் : மார்ச்சு 1993இல் இன்டெல் நிறுவனம், இன்டெல் ஐ486 செயலிக்கு வாரிசாக அறிமுகப்படுத்திய புதிய நுண் செயலி. சிஸ்க் (CISC) அடிப்படையிலான நுண்செயலி. 33 இலட்சம் மின்மப் பெருக்கிகளைக் கொண்டது. 32 பிட் (துண்மி) முகவரிப் பாட்டை, 64 பிட் (துண்மி) தகவல் பாட்டை, உள்ளிணைக்கப்பட்ட இரண்டு 8-கேபி நிலை-1 (L1) இடை மாற்றகம் ஆகியவை கொண்டது. முறைமை மேலாண்மைப் பாங்கு உண்டு. இதன்மூலம் கணினி மையச் செயலகம் தொடர்பிலாப் பணி செய்யும்போதும் எப்பணியுமின்றி வாளா இருக்கும்போதும் சில முக்கிய கணினி உறுப்புகளை மெதுவாக இயக்க அல்லது நிறுத்திவிட நுண்செயலியால் முடியும். தகவல் நம்பகத்தன்மை, செயல்பாட்டு மிகைமைச் சரிபார்ப்பு ஆகிய வசதிகளும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

Pentium Pro : பென்டியம் புரோ : நவம்பர் 1995இல் இன்டெல் வெளியிட்ட 150-200 மெகா ஹெர்ட்ஸ் வேக 32 பிட் (துண்மி) செயலிகளின் குடும்பம். 8086 குடும்பச் செயலிகளின் அடுத்த தலைமுறை செயலிகளாகப் பென்டியம்புரோ விளங்கியது. பென்டியம் செயலிகளின் அடுத்தகட்ட வளர்ச்சி ஆகும். 32 பிட் (துண்மி) இயக்க முறைமைகளும் பயன்பாடுகளும் இதில் செயல்படும். இந்த வரிசையில் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள செயலி பென்டியம் 4 ஆகும். 1.7GHz வேகத்தில் செயல்படுகிறது.

pentium upgradable : பென்டியமாய் மேம்படுத்தத்தகு: 1. பென்டியம் வகைச் செயலியைப் பொருத்த முடிகிற ஐ486 தாய்ப்பலகை, 2. பென்டியம் செயலி பொருத்தி பென்டியம் வகை பீசியாய் மேம்படுத்த முடிகிற 486 பீசி.

perfective : முழுமையாக்கல்.

period : காலம்; நேரம் : ஓர் அதிர்வலை ஒரு முழு சுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஓர் அதிரும் மின் அலையில் திரும்ப நிகழ்வுகளுக்கு இடையே உள்ள கால இடவெளி. f என்பது அதிர்வின் அலைவு எண் (ஹெர்ட்ஸில்), t என்பது நேரம் (வினாடியில்) எனில், t=l/f ஆகும்.

period, retention: தக்கவைப்புக் காலம்.

peripheral equipment: புறநிலை கருவி.

peripheral power supply : மாற்று மின்வழங்கி : ஒரு கணினி அல்லது ஒரு சாதனத்துக்கு வழங்கப்படும் வழக்கமான மின்வழங்கியில் பழுதேற்படும்போது மாற்று ஏற்பாடாக வைக்கப்பட்டுள்ள துணை நிலை மின்வழங்கி.

Perl : பேர்ல் : ஒரு கணினி மொழி. செய்முறைப் பிழிவு மற்றும் அறிக்கை மொழி என்று பொருள் படும் Practical Extraction and Report Language என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சி-மொழி மற்றும் யூனிக்ஸின் பல்வேறு பயன் கூறுகளின் அடிப்படையில் அமைந்த ஆணைமாற்றி (Interpreter) அடிப்படையிலான மொழி. உரைக் கோப்புகளிலிருந்து தகவலைப் பிரித் தெடுக்க மிகவும் திறன்வாய்ந்த, சரம் கையாளும் வசதிகளைக் கொண்டது