பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

permanent swap file

341

personal and personality


பேர்ல் மொழி. சொற்கள் இணைத்து ஒரு சரத்தைத் தொடுத்து அதனை ஒரு கட்டளை வடிவில் செயல்தளத்துக்கு (shell) அனுப்பும் திறனுள்ள மொழி. எனவே, பேர்ல் பெரும்பாலும் முறைமை மேலாண்மைப் பணிகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பேர்ல் மொழியில் எழுதப்படும் ஒரு நிரல் உரைநிரல் (script) எனப்படும். அமெரிக்க நாட்டு நாசா நிலையத்தின் பொறி உந்துதல் ஆய்வுக் கூடத்தில் லேரி வால் (Larry Wall) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

permanent swap file : நிலைத்த மாறுகொள் கோப்பு : விண்டோஸ் இயக்க முறைமையில், மெய்நிகர் நினைவகச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் தொடர்ச்சியான வட்டுப் பிரிவுகளில் எழுதப்பட்ட ஒரு கோப்பு.

permission : அனுமதி: ஒரு பிணைய முறை அல்லது பல்பயனாளர் கணினி அமைப்புகளில் தன்னுடைய பயனாளர் கணக்கு மூலமாக ஒரு தகவலை/வசதியை அணுகிப் பெற ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு வழங்கப்படுவது. இத்தகைய அனுமதிகளை முறைமை நிர்வாகி அல்லது அதிகாரம் தரப்பட்ட வேறு நபர் பயனாளருக்கு வழங்குகிறார். இந்த அனுமதிகள் பற்றிய தகவல் மையக் கணினியில் பெரும்பாலும் அனுமதிக் குறிப்பேடு permission log-என்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன. பயனாளர் கணினி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வளத்தை (தகவல்/வசதி) அணுக முற்படும் போது அனுமதிக் குறிப்பேட்டில் சரி பார்க்கப்பட்டு முடிவெடுக்கப்படுகின்றன.

permission, access: அணுகு அனுமதி.


perpendicular recording: செங்குத்துப் பதிகை: காந்த ஊடகங்களின் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் பதிவு செய்யும் தளத்துக்குச் செங்குத்து திசையில் அமையும் காந்தத் துருவங்களின் போக்கு, துண்மி (பிட்) மதிப்புகளைத் தீர்மானிக்கின்றன.

persistent data ; நிலைத்த தரவு: தரவுத் தளத்திலோ, நாடா போன்ற சேமிப்பு சாதனங்களிலோ ஒரு முறை பதியப்படும் தகவல் அடுத்த முறை அணுகும்போது அழிந்து விடாமல் நிலைத்திருத்தல்.

persistent storage : நிலைத்த சேமிப்பு : ரோம் (ROM) போன்ற நினைவகச் சேமிப்புச் சாதனங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்ட பின்னும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும் தகவல்.

personal communication : தனிவழி தகவல் தொடர்பு.

personal finance manager : சொந்தக் கணக்கு மேலாளர் : பணம் கொடுத்த ரசீதுகள், காசோலைகள் போன்ற எளிய வரவு-செலவுக் கணக்கு வைப்புப் பணிகளுக்கு உதவுகின்ற ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பு.

personal video recorder-PVR- : தனியாள் ஒளிக்காட்சிப் பதிப்பி.

personal form letter : தனியாள் படிவக் கடிதம்.

personal and personality interview: நேரடி மற்றும் ஆளுமைக்கான நேர்காணல்.