பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

perspective view

342

phase-shift keying


perspective view : தொலையணிமைக் காட்சி : கணினி வரைகலையில் பொருள்களை முப்பரிமாணத்தில் (உயரம், அகலம், ஆழம்) காட்டும் ஒரு காட்சி முறை. ஆழத் தன்மையை விருப்பப்படும் அளவுக்கு அமைத்துக்கொள்ளும் முறை. மனிதக் கண்களுக்கு ஓர் உண்மையான காட்சியைக் காண்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

peta : பீட்டா : ஒரு குவாட்ரில்லியனைக் (1015) குறிக்கும். P என்ற எழுத்தால் குறிப்பர். 2-ஐ அடியெண்ணாகக் கொண்ட இரும எண் முறையில் பீட்டா என்பதன் மதிப்பு 1,122,899,906,842,624 ஆகும். இரண்டின் அடுக்காகக்கூறுவதெனில் 200 எனலாம்.

petabyte : பீட்டா பைட்: PB என்ற எழுத்துகளால் குறிக்கப்படும். ஒரு குவாட்ரில்லியன் பைட்டுகளைக் (1,125,899,906,842,624) குறிக்கிறது.

.pg : பீஜி : ஓர் இணைய தள முகவரி பாப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PGP : பீஜிபீ : மிகச் சிறந்த அந்தரங்கம் என்று பொருள்படும் Pretty Good Privacy என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஃபிலிப் ஸிம்மர்மான் (Philip Zimmermann) உருவாக்கிய ஆர்எஸ்ஏ படிமுறைத் தருக்கத்தின்அடிப்படையில் அமைந்த பொதுத் திறவி மறையாக்க (Public Key Encryption) முறைக்கான ஒரு நிரல். பிஜிபீ மென்பொருளின் பராமரிப்பு உதவியில்லாத இலவசப் பதிப்பும், உதவியுள்ள வணிகப் பதிப்பும் கிடைக்கின்றன.

.ph : .பீ.ஹெச்: ஓர் இணைய தள முகவரி ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

phase : அலையிடைப் படி; மாறுபாட்டுக் கோணம்; அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலைவரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 முதல் 180 டிகிரிகள் வரை முந்தவோ பிந்தவோ முடியும்.

phase encoding :அலையிடைப்படி குறியாக்கம் : 1. தொடர்முறை (Analog) சுமப்பி அலைமீது இலக்க முறைத் தகவலை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தகவல் அனுப்புகையில் துண்மி (பிட்) அடர்வு அதிகரிக்கப்படுகிறது. 2. மின்காந்த சேமிப்புச் சாதனங்களில் தகவலைப் பதியும் ஒருவகைத் தொழில்நுட்பம். இந்த முறையில் தகவல் சேமிப்பு அலகு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்று எதிரெதிர்துருவ நிலை கொண்டதாக காந்தப்படுத்தப் படுகிறது.

phase-shift keying: படிநகர்வு குறியாக்கம் : தகவலைக் குறியாக்கம் செய்ய இணக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு வழிமுறை. இலக்கமுறைத் தகவலை ஏந்திச் செல்ல ஒரு சுமிப்பி அலையின் படிநிலை நகர்வு, அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. இந்த நுட்பத்தின் எளிய வடிவம், சுமப்பி அலையின் படிநிலை இருநிலைகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். 0 டிகிரி நகர்வு இருக்கும் அல்லது 180