பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anonymous FTP

33

ANSI.SYS


தளங்கள் பல உள்ளன. இணையப் பயனாளர் ஒருவர் இத்தகைய தளங்களை அணுகப் பயன்படுத்தும் அணுகுப் பெயர் "பெயரிலி" எனப்பொருள்படும் "அனானிமஸ்" என்ற பெயராகும்.

anonymous FTP : அணுகுப் பெயரில்லா ஆவணச் சேமிப்பகம்; பொதுப்பயன் எஃப்டிபீ தளம் : இணையத்தில் எவ்வளவோ தகவல்கள் எல்லோரும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இணையத் தகவல் பரிமாற்றத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (File Transfer Protocol) என்பது ஒருவகை. இந்த அடிப்படையில் கோப்புப் பரி மாற்றம் கொள்ள வாய்ப்பளிக்கும் தளங்கள் எஃப்டிபீ தளங்கள் என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக பிணையத்திலுள்ள (network) ஒரு சேமிப்பகக் கணினியை அணுக உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிய அணுகுபெயரையும் நுழைசொல்லையும் தந்தபிறகே தளத்தை அணுக முடியும். ஆனால் இணையத்திலுள்ள பல எஃப்டிபீ தளங்களை அனானிமஸ் அல்லது எஃப்டிபீ என்ற அணுகுபெயர் கொடுத்து, நுழைசொல் ஏதுமின்றியோ அல்லது பயனாளரின் மின்னஞ்சல் முகவரி அல்லது அனானிமஸ் என்ற சொல்லையோ நுழைசொல்லாகத் தந்து அணுக முடியும். இத்தகு தளங்கள் பொதுப் பயன் எஃப்டிபீ தளங்கள் என்றழைக்கப்படுகின்றன.

anonymous post : பெயரில்லா மடல்; மொட்டைக் கடிதம் : இணையத்தில் செய்திக் குழுவிற்கு அல்லது அஞ்சல் குழுவிற்கு (Newsgroups or Mailing Lists) அனுப்புபவர் பெயரில்லாமல் அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தியை அல்லது ஒரு மடலைக் குறிக்கிறது. செய்திக் குழுவிற்கு ஒரு பெயர் மறைப்பு வழங்கன்/கணினி மூலம் இத்தகைய பெயரிடாச் செய்தியை அனுப்ப முடியும். மின்னஞ்சல் முறையில் பெயரிடா மறுமடல் வழங்கன் கணினி, மொட்டைக் கடிதம் அனுப்புவதைச் சாத்தியமாக்குகிறது.

anonymous remailer : பெயர் மறைப்பு மறுமடல் கணினி : இணையத்தில் மின்னஞ்சல் போக்குவரத்தை அதற்குரிய வழங்கன் (server) கணினிகள் ஒழுங்குபடுத்துகின்றன. அனுப்புபவரின் பெயரை மறைத்துக் கடிதங்களை அனுப்பும் வசதியைச் சில கணினிகள் வழங்குகின்றன. அவை தன் வழியாக அனுப்பப்படும் கடிதங்களின் தலைப்பிலுள்ள அனுப்புபவரின் முகவரியை நீக்கி விட்டுச் செய்தியை மட்டும் முகவரி தாரருக்கு அனுப்பிவைக்கின்றன. ஆனால், மடலைப் பெறுபவர் இதே வழங்கன் கணினி மூலம் அனுப்பியவருக்குப் பதில்மடல் அனுப்ப முடியும்.

ANSI/SPARC அன்சி/ஸ்பார்க் : அமெரிக்க தேசிய தரக் கட்டுப் பாட்டுக் கழகம்/தரக் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் தேவைகளின் குழு எனப் பொருள்படும் American National Standards Institute/Standards Planning And Requirements Committee என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1970-களில் அன்சிக் குழு குறிப்பிட்ட சில தரவுத் தள மேலாண்மை அமைப்புகளின் அடிப் படையாக விளங்கக்கூடிய, பொதுமைப் படுத்தப்பட்ட மூன்றடுக்குக் கட்டமைப்பு ஒன்றை பரிந்துரை செய்தது.

ANSLSYS : அன்சி.சிஸ் : பயனாளர் தன்விருப்பப்படி கணினித் திரையில்