பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pre decrement operator

356

preview



வாக, பயன்பாட்டு நிரல்களில் பெருக்கல், வகுத்தல் முதலிலும், கூட்டல் கழித்தல் அதன்பிறகும் செய்யப்படுகின்றன. இந்த வரிசை முறையை மாற்றவேண்டுமானால் பிறை அடைப்புக்குறிகளைப் பயன்படுத்தலாம். அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது முதலில் நிறைவேற்றப் படும். 3+4x5 = 23 (3+4)x5 = 35.

காண்க : Operator Precedence.

pre decrement operator : முன் குறைப்பு செயற்குறி.

preemptive muititasking : முற்படு பல்பணியாக்கம் : பல்பணியாக்கத் தில் ஒருவகை. இயக்க முறைமையானது குறிப்பிட்ட கால இடை வெளியில் ஒரு நிரலின் செயல் பாட்டில் குறுக்கிட்டு, கணினியின் கட்டுப்பாட்டை, காத்திருக்கும் இன்னொரு நிரலுக்கு மாற்றித்தரும். இம்முறையில், ஏதேனும் ஒரு நிரல், கணினிச் செயல்பாட்டை ஏகபோகமாய் ஆக்கிரமித்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

preferences : முன்தேர்வுகள்; முன்னுரிமைகள்; விருப்பத் தேர்வுகள் : பெரும்பாலான வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில், ஒரு பயன்பாட்டு நிரல் ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை பயனாளர் வரையறுத்துக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ஒரு சொல்செயலிப் பயன்பாட்டில் அளவுகோல் (ruler) தோன்ற வேண்டுமா, கருவிப் பட்டை, நிலைமைப் பட்டை போன்றவை இருக்க வேண்டுமா, ஆவணத்தின் தோற்றம் அச்சுக்குப் போவது போன்ற ஓர இடைவெளிகளுடன் தோற்றமளிக்க வேண்டுமா மற்றும் இதுபோன்ற விருப்பத் தேர்வுகளை முன் கூட்டியே அமைத்துக் கொள்ள முடியும்.

pre - increment operator : முன்கூட்டுச் செயற்குறி.

premium rate service : உயர்மதிப்புக் கட்டண சேவை : ஐஎஸ்டின் (ISDN - Integrated Services Digital Networks) தொலைதொடர்புச் சேவையில் ஒருவகை சேவை.

pressure-sensitive : அழுத்தம் உணரி : ஒரு மெல்லிய பரப்பின்மீது அழுத்தம் கொடுக்கும்போது ஒரு மின் இணைப்பு ஏற்பட்டு, கணினியால் உணர்ந்து பதிவுசெய்யும் வகையில் ஒரு நிகழ்வினை ஏற்படுத்தும் ஒரு சாதனம். தொடுஉணர்வு வரைவு பேனாக்கள், தொடுவிசைப் பலகைகள், சில தொடுதிரைகள் இந்த வகையைச் சார்ந்தவை.

prety print : அழகு அச்சு; ஒழுங்கு அச்சு : அச்சிடும்போது நிரல் கட்டளைகளை எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கும் வசதி சில உரைத்தொகுப்பான்களில் உள்ளன. (எ-டு) நிரல் கூறுகளுக்கிடையே ஒரு வெற்று வரி சேர்த்தல், பின்னல் நிரல்கூறுகளுக்கு ஒர இடம்விடல், சில கட்டளை அமைப்புகளில் வரிகளை உள்ளடங்கி அமைத்தல்.

preparation, data : தகவல் தயாரிப்பு.

presentation : கருத்து விளக்கம்; முன் வைப்பு.

preventive : முன்தடுப்பு.

preview : முன்காட்சி : சொல்செயலி மற்றும் பிற பயன்பாடுகளில் உள்ள