பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

previous

357

print buffer



ஒரு வசதி. ஒர் ஆவணத்தை அச்சிடுவதற்கென வடிவமைத்த பின் நேராக அச்சுப்பொறிக்கு அனுப்பாமல், அச்சிடப்போகும் அதே வடிவமைப்பில் கணினித் திரையில் காணலாம். பயனாளருக்கு மனநிறைவு ஏற்படின் அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவிடலாம்.

previous : முற்பட்ட, முந்தைய.

previous page button : முந்தைய பக்கப் பொத்தான்.

primary and extended : முதன்மை மற்றும் நீட்டிப்பு.

primary storage : அடிப்படை சேமிப்பகம்; முதன்மைச் சேமிப்பகம்.

primary channel : முதன்மைத் தடம் : இணக்கி போன்ற தகவல் தொடர்புச் சாதனத்தில் தகவல் அனுப்புதடத்தின் பெயர்.

Primary Domain Controller : முதன்மைக் களக் கட்டுப்படுத்தி : 1. விண்டோஸ் என்டி-யில் பிணைய வளங்களையும், பயனாளர் கணக்குகளையும் மையப்படுத்தப்பட்ட முறையில் நிர்வகிக்க உதவும் ஒரு தரவுத் தளம். பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் நுழைவதற்குப் பதிலாக ஒரு களத்தினுள் நுழைய இந்த தரவுத் தளம் அனுமதிக்கிறது. ஒருகளத்தினுள் இருக்கும் கணினிகள் பற்றிய விவரங்களை வேறொரு கணக்கு வைப்புத் தரவுத் தளம் கவனித்துக் கொள்கிறது. களத்தின் வளங்களைப் பயனாளர்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. 2. ஒரு குறும்பரப்புப் பிணையத்தில், களத்தின் பயனாளர் கணக்குகளுக்கான தரவுத் தளத்தின் முதன்மை நகலைப் பராமரித்து, பயனாளர்களின் புகுபதிகைக் கோரிக்கைகளைச் சரிபார்க்கும் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் வழங்கன் கணினி.

primary memory : முதன்மை நினைவகம்.

primary storage : முதன்மை சேமிப்பகம் : குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்கள் துணைநிலை சேமிப்பகங்கள் அல்லது சில வேளைகளில் காப்புச் சேமிப்பகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

prime factors : பகாஎண் காரணிகள்.

prime number : பகாஎண்.

primitive data type : மூலத் தரவு இனம்.

print : அச்சு; அச்சிடு : கணிப்பணியில் தகவலை அச்சுப் பொறிக்கு அனுப்புதல். சில மென்பொருள்களில் சிலவேளைகளில் இச்சொல், காண்பி, நகலெடு என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக பேசிக் மொழியில் PRINT என்னும் கட்டளை வெளியீட்டைக் கணினித் திரையில் காட்டும். அதுபோலவே சில பயன் பாட்டுத் தொகுப்புகளில், PRINT என்னும் கட்டளைமூலம் ஒரு கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்பு வதற்குப்பதில் வட்டில் பதிவு செய்யும்படி திசைமாற்ற முடியும்.

print area : அச்சுப் பரப்பு.

print buffer : அச்சு இடைகம்; அச்சு இடைநினைவகம் : ஒரு தகவலை