பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

s-100 bus

398

SAPI




S

s-100 bus : எஸ்-100-பாட்டை : இன்டெல் 8080, ஸி.லாக் இஸட்-80 நுண்செயலிகளை அடிப்படையாகக் கொண்ட கணினிகளின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட 100 (பின்கள்) இணைப்பூசிகள் கொண்ட பாட்டை வரன்முறை. மோட்டோ ராலா 6800, 68000, இன்டெல் ஐஏபீx86 குடும்ப நுண்செயலிகளைக் கொண்ட கணினிகளும் எஸ்-100 பாட்டையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. தொடக்ககால கணினி ஆர்வலர்களிடையே எஸ்-100 கணினிகள் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கின. அவை திறந்த நிலைக் கட்டுமான அமைப்பைக் கொண்டவை. பயனாளர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகைப்பட்ட கூடுதல் விரிவாக்கப் பலகைகளைப் பொருத்திக் கொள்வதற்கு இடமளிப்பதாய் அவை விளங்கியதே இதற்குக் காரணம்.

.sa : .எஸ்ஏ : ஓர் இணையதள முகவரி சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Sad Mac : வருத்த மேக், சோக மேக்: ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகள் இயக்கப்படும்போது தொடக்க நிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தால் கிடைக்கும் பிழைக்குறிப்பு. ஒரு சோகமான முகம் கொண்ட மெக்கின்டோஷ் படம் அடியில் ஒரு பிழைச் செய்தியுடன் தோற்றமளிக்கும்.

safe mode : தீங்கில்லாப் பாங்கு; பாதுகாப்பு பாங்கு : விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூலம் பயனாளர் தன் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் கண்டறிந்து சரிசெய்துகொள்ள முடியும். பணி முடித்து முறைப்படி கணினி இயக்கத்தை நிறுத்தாவிட்டாலும், வேறு சில காரணங்களினால் கணினி இயக்கம்பெற முடியாமல் போகும் போதும் இவ்வாறு நிகழும்.

sample : மாதிரி .

sampling synthesizer : மாதிரி கூட்டிணைப்பி; மாதிரி இணைப்பாக்கி : படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இலக்கமுறைப்படுத்தப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அலைவரிசைகளில் ஒலியை உருவாக்கிட வடிவமைக்கப்பட்ட சாதனம். எடுத்துக்காட்டாக, ஒரு பியானோ ஒலித்துணுக்கை இலக்க முறைப்படுத்தி நினைவகத்தில் சேமித்து வைத்துக்கொண்டு, பியானோ இசையைப் போன்றே பல் வேறு இசைத்துணுக்குகளை இணைப்பாக்கியில் உருவாக்கலாம்.

SAPI : சேப்பி; எஸ்ஏபீஐ : குரலறி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Speech Application Programming interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில்